• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 16:05:31    
குள்ள மனிதர்

cri

அழிவின் விளிம்பில்

உலக மொழிகளில் அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளின் பட்டியலை யுனஸ்கோ வெளியிட்டுள்ளது. உலகில் பேசப்படுகின்ற 6,900 மொழிகளில் 2,500 மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு 900 மொழிகள் தான் அழிவின் ஆபத்தில் இருப்பதாக யுனஸ்கோ அறிவித்தது. எட்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2,500 யை எட்டியுள்ளது. 199 மொழிகள் 12 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படுகிறது. இதில் உக்கிரேனில் ஆறு பேரால் மட்டுமே பேசப்படுகின்ற Karaim மொழியும், அமெரிக்காவின் Oklahoma வில் 10 பேரால் மட்டுமே பேசப்படுகின்ற Wichita மொழியும், இந்தோனேஷியாவில் நான்கு பேரால் மட்டுமே பேசப்படுகின்ற Lengilu மொழியும் அடக்கம். 178 மொழிகள் 10 முதல் 150 பேரால் மட்டுமே பேசப்படுகின்றன. இந்தியாவிலுள்ள 196 மொழிகளும், அமெரிக்காவிலுள்ள 192 மொழிகளும், இந்தோனேஷியாவின் 147 மொழிகளும் அழியும் ஆபத்திலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மொழி வேறுபாடுகள் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தான் அதிக மொழிகள் அழியும் ஆபத்தையும் எதிர்நோக்குவதாக 25 நிபுணர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவை வழிநடத்திய ஆஸ்திரேலிய மொழியிலாளர் Christopher Moseley தெரிவித்திருக்கிறார்.


1 2