• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 16:01:10    
மக்கள் பிரதிநிதி உருவாவது

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஜனநாயக தேர்தலின் வடிவங்களில் இரண்டு வகைகள் உள்ளன. தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு வகையாகும். எடுத்துக்காட்டாக மாவட்ட மற்றும் வட்ட நிலை தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் வாக்காளர்களின் நேரடி வாக்கிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வேட்பாளர்கள் சட்டத்தின் படி உறுதிப்படுத்தப்பட்ட வாக்குகளில் பாதி வாக்குகளை பெற்றிருந்தால் அவர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இன்னொரு வகை இதற்கு அடுத்த உயர் மட்ட மக்கள் பேரவைக் கூட்டத்தில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகும். இந்த தேர்தல் நேரடியற்ற தேர்தல் என்று கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாக வட்ட தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள், மாநில நிலை தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள், நகர நிலை தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் ஆகியோர் அதற்கு அடுத்த உயர் மட்ட மக்கள் பேரவை கூட்டத்திற்கு பிரதநிதிகளை தேர்ந்தெடுப்பர்.

பல்வேறு நிலை மக்கள் பேரவை கூட்டங்களுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது

பல்வேறு நிலை தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் சட்டம் படி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஒன்று, குடிமக்கள் தேர்வு செய்யும் உரிமையும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் சமமாக கொண்டுள்ளனர். 18 வயது வந்த சீன குடி மக்கள் இனம், ஜாதி, பால், தொழில், குடும்ப நிலை, மத நம்பிக்கை, கல்வியறிவு, சொத்து நிலைமை, வாழும் கால வரம்பு ஆகியவற்றை பொருட்படுத்தால் தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையை பெறுவர். இவர்களில் சட்டத்தின் படி அரசியல் உரிமை பறிக்கப்பட்டவர்கள் இவ்விரண்டு உரிமைகளையும் அனுபவிக்க முடியாது.

இரண்டு, நேரடியாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் இத்தேர்தலில் உள்ளன. கட்டற்றமுறையில் வாக்காளர்கள் சுய விருப்பத்தின் படி நாடளவிலான குடிமக்களை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கலாம். தேசிய மக்கள் பேரவை கூட்டத்திற்கான பல்வேறு நிலை பிரதிநிதிகள் அனைவரும் அடுத்த மட்ட மக்கள் பேரவைக் கூட்டத்தில்தான் தேர்ந்தெடுக்கப்படுவர்.

1 2