இரக்கச் செயல்


அண்மையில், ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத்தீயால் 180 க்கு மேலானோர் இறந்தனர். மீட்புதவிப் பணியின்போது தீயணைப்புப் படை தொண்டர் ஒருவர், கோவ்லா விலங்கிற்கு முதலுதவி செய்து மீட்புதவி புரிந்தது உயிரினங்களுக்கு காட்டப்படும் இரக்கச்செயலாக போற்றப்படுகிறது. மெல்போனிலிருந்து 150 கிலோமீட்டருக்கு அப்பால் வட Mirboo வில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த பகுதியில் மீட்புதவிப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை தொண்டரான Dave Tree என்பவர் ஆஸ்திரேலியாவின் அடையாள சின்னங்களில் ஒன்றான கோவ்லா விலங்கை காயங்களோடு காப்பாற்றினார். வெப்பத்தை தணிக்கும் விதமாக அதற்கு குடிக்க நீர் கொடுத்து முதலுதவி அளித்தார். அதன் நிழற்படங்களை ஊடகங்கள் வெளியிட்டன. Sam என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோவ்லா விலங்கிற்கு Dave Tree செய்த முதலுதவி, உயிர்களுக்கு காட்டப்படும் தலைசிறந்த இரக்கச்செயலாக மக்களால் போற்றப்படுகிறது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையை சேர்ந்த கோவ்லா விலங்கு உலகில் அழிந்துவரும் விலங்கினங்களில் ஒன்றாகும்.
1 2
|