ஜூன் திங்களில், சீனாவின் கான்சு மாநிலத்தில் வெப்பம் அதிகம். சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பைப் பயன்படுத்தி, 10 நிமிடத்தில் விவசாயி gaoxiuqin அம்மையார் வெந்நீரை தயாரித்துக் கொண்டார். செய்தியாளருக்குப் பேட்டியளித்தப்போது அவர் கூறியதாவது:
2, 3 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பைப் பயன்படுத்தத் துவக்கினேன். இந்த அடுப்பைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது. இதற்கு முன், விறகை வெட்டி பயன்படுத்துவது மிகவும் தொல்லையானது என்று அவர் கூறினார்.
சீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள கான்சு மாநிலத்தின் திங்சி நகரைச் சேர்ந்த ஆன்திங் மாவட்டத்தின் தா பிங் ஊரில் Gaoxiuqin வாழ்கின்றார். அவரது ஊரில், ஏறக்குறைய 120 குடும்பங்கள் சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பைப் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு முன், நாள்தோறும், அங்குள்ள விவசாயிகள் விறகை வெட்டி பயன்படுத்தியதால், வீட்டில் அதிகமான தூசி காணப்பட்டது. தற்போது, சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது. வீடுகள் மேலும் தூய்மையாக விளங்குகின்றன. இதனால், இந்த ஊரின் தோற்றம் பெரிதும் மேம்பட்டுள்ளது.
சீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள கான்சு மாநிலம், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் முதலியவற்றில், மிகுந்த சூரிய வெப்ப ஆற்றல் காணப்படுகிறது. சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பு, உள்ளூர் பிரதேசத்தின் விவசாயிகளால் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்த அடுப்புக்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் உணவைச் சமைக்கின்றனர். சூரிய வெப்ப ஆற்றல் அடுப்புக்களை பயன்படுத்தி, சோற்றையும் கறிகளையும் சமைத்து, வெந்நீர் தயாரிப்பது மிகவும் வசதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூரிய வெப்ப ஆற்றல் அடுப்புகள், கான்சு செயற்கை எரியாற்றல் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டன. விலை குறைவான, பயனுள்ள தூய்மையான எரியாற்றலைப் பயன்படுத்துவதால், இந்த அடுப்புக்கள், கிராமப்புறங்களில் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்று இந்த ஆய்வகத்தின் பொறியியலாளர் சின் ச்சி சு தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், சூரிய வெப்ப ஆற்றல் அடுப்பைப் பயன்படுத்தும் செலவு, 180 யுவான் மட்டுமே. எனவே, இதன் மூலம், ஒவ்வொரு குடும்பமும், ஏறக்குறைய ஆயிரம் யுவான் சிக்கனப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
1 2
|