• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-27 16:57:29    
கான்சு மாநிலத்தின் புதிய எரியாற்றல் பயன்பாடு

cri

ஆண்டுதோறும், கான்சு மாநிலத்தில், சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு அளவு, 67 இலட்சம் கோடி கிலோவாட்டாகும். நிறைந்த சூரிய ஒலி வீச்சு, கான்சு மாநிலத்தின் தூய்மையான எரியாற்றல் பற்றிய ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்கு வசதியான நிலைமையை உருவாக்கித் தருகிறது. 2008ம் ஆண்டின் இறுதி வரை, சுமார் 7 இலட்சத்து 60 ஆயிரம் சூரிய வெப்ப ஆற்றல் அடுப்புகள் கான்சு மாநிலத்தில் பரவலாகியுள்ளன.

1977ம் ஆண்டு, சீனாவின் முதலாவது அரசு சாரா சூரிய வெப்ப ஆற்றல் அறையை கான்சு மாநிலம் உருவாக்கியது. இம்மாநிலத்தின் செயற்கை எரியாற்றல் ஆய்வகத்தின் பொறியியலாளர் சாங் லான் யிங் கூறியதாவது:  

சூரிய வெப்ப ஆற்றல் அறையின் மூலம், உள் அறையிலுள்ள தட்ப வெட்ப நிலையை உயரத்தலாம். மின்னாற்றல் அல்லது உந்து ஆற்றல் தேவையில்லை. ஆகையால், சுமார் 65 விழுக்காட்டு எரியாற்றலை சிக்கனப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி வளர்ப்பதோடு, கிராமப்புறங்களின் வலுவற்ற உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, உயிரின எரியாற்றலையும் கான்சு மாநிலம் ஆக்கப்பூர்வமாக பரவல் செய்து வருகிறது.

விவசாயி Lihongwei இன் வீட்டில், ஒரு முழுமையான, பயன் மிக்க மீத்தேன் வாயு வசதி இருக்கின்றது. அவர் இது பற்றி அறிமுகப்படுத்தினார்.  

தற்போது, விறகு வெட்டத் தேவையில்லை. இந்த வசதி, மிகவும் பாதுகாப்பானது. நலவாழ்வுக்கு உகந்தது என்று அவர் கூறினார்.

2002ம் ஆண்டு முதல், இந்த ஊரின் அரசு மற்றும் தொடர்புடைய வாரியங்கள், 2 இலட்சத்திற்கு மேலான யுவானை ஒதுக்கியுள்ளன. மீத்தேன் வாயு வசதி முதலிய திட்டப்பணிகள், பொது மக்களுக்கு மேலதிகமான வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளையில், உள்ளூர் பிரதேசத்தின் சுற்றுச் சூழல் சீராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கைச் சூழல் நேயமுள்ள மீத்தேன் வாயு வசதிகள் உருவாக்கப்பட்ட பின், ஆண்டுதோறும், சுமார் 2,3 ஆயிரம் யுவானை விவசாயிகள் சிக்கனப்படுத்தலாம். எரியாற்றல் மற்றும் பணத்தைச் சிக்கனப்படுத்தும் இத்தகைய திட்டப்பணிகள், கான்சு மாநிலத்தின் கிராமப்புறங்களில், பரவல் செய்து பயன்படுத்தப்படுவது, மக்களின் வாழ்க்கைக்கு நலன் தரும் என்று ஆன் திங் பிரதேசத்தைச் சேர்ந்த சிங் லான் சான் வட்டத்தின் தலைவர் மா சின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

மீத்தேன் வாயு வசதி, முழு ஆண்டுகாலத்தில், வாயுவைத் தயாரிக்கின்ற போது, மாசுபடுதல் ஏதும் ஏற்படவில்லை. இத்தகைய திட்டப்பணிகளின் மூலம், மாடுசுபாடற்ற இயற்கைச் சூழல் கொண்ட சுழற்சி பொருளாதார வளர்ச்சி அமைப்புமுறை உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இனி, கிராமப்புறப் பிரதேசங்களில், உயிரின எரியாற்றலை தொடர்ந்து பரவல் செய்ய வேண்டும். கிராமப்புற வாழ்க்கையில், வேதியியல் உரத்தையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் குறைத்து, நீர், மின்சாரம் மற்றும் எண்ணெய் செலவுகளையும் குறைக்க வேண்டும். தூய்மையான, உயர் பயன் தரக் கூடிய முறையில் வளர்ச்சி வாய்ப்பை நாட வேண்டும் என்று கான்சு மாநிலத்தின் துணைத் தலைவர் சி சுன் தெரிவித்தார்.


1 2