• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-28 16:28:38    
சீனாவில் புதிய உயர் தொழில் நுட்பத்தின் தொழில் மயமாக்கத்தை விரைவுப்படுத்தும் பணி

cri

சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும், சீனாவின் புதிய உயர் தொழில் நுட்பத் துறை விரைவாக வளர்ந்து வருகின்றது. இத்தொழில் நுட்பத்தின் தொழில் மயமாக்கத்தை விரைவுப்படுத்தும் வகையில், சீனாவின் பல்வேறு இடங்களின் அறிவியல் தொழில் நுட்ப வாரியங்கள் நிதி மற்றும் முறைமை ரீதியான ஆதரவு கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Foton lovol சர்வதேச கனரகத் தொழிற்சாலை, கிழக்கு சீனாவின் சான் துங் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவில் பெரிய ரக சாதனங்களைத் தயாரிக்கும் முக்கிய புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அண்மையில் இது புதிதாக ஆராய்ந்து தயாரித்த அதிக குதிரை சக்தியுடைய ட்ராக்டர்கள் சந்தைக்குள் நுழைந்துள்ளன. இந்தத் தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் wang jin fu சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்துக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது

அறிவுகளைத் தொகுத்து, தற்சார்பு புத்தாக்க தொழில் நுட்பம் மூலம், அதிக குதிரை சக்தியுடைய ட்ராக்டர்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். இத்துறையில் சீனத் தொழில் நிறுவனங்களின் திறமையை இது முழுவதும் வெளிப்படுத்துகின்றது என்று அவர் கூறினார்.

சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பால், இந்த தொழில் நிறுவனம் தயாரிக்கும் பல பெரிய ரக சாதனங்களின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. ஆனால், சில முன்னேறிய, அதிக தொழில் நுட்பம் கொண்ட உற்பத்தி பொருட்கள் தொடர்ந்து சந்தையின் வரவேற்பை பெற்று வருகின்றன என்று wang jin fu கூறினார். புதிதாக ஆராய்ந்து தயாரித்த அதிக குதிரை சக்தியுடைய ட்ராக்டர்களை வாங்க அதிக முன்பதிவுப் படிவங்களை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில், சீனாவின் புதிய உயர் தொழில் நுட்பத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடர்ப்பாட்டு தடுப்பு ஆற்றலை நன்றாக வெளிப்படுத்தின. இது பற்றி, சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் wan gang கூறியதாவது

புதிய உயர் தொழில் நுட்பம் கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தேசிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களின் நிதி நெருக்கடி தடுப்பு ஆற்றல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2008ம் ஆண்டின் முதல் 9 திங்களில், 54 தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களின் மொத்த வருமானம், மொத்த தொழில்துறை உற்பத்தி மதிப்பு, தொழிற்துறை அதிகரிப்பு மதிப்பு ஆகிய முக்கிய குறியீடுகள் 2007ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட தலா 20 விழுக்காடுக்கு மேல் அதிகரித்துள்ளன. மேற்கு மற்றும் மத்திய பகுதி, முத்து ஆற்று முகத்துவாரம் ஆகியவற்றிலுள்ள தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களின் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 30 விழுக்காட்டை எட்டியது அல்லது தாண்டியது என்று அவர் கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன், தீபம் என்னும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி திட்டத்தை சீன அரசு துவக்கியது. சீனாவின் புதிய உயர் தொழில் நுட்ப கனிகளை உற்பத்தி பொருள் மயமாக்கத்தையும் புதிய உயர் தொழில் நுட்பங்களின் தொழில் மயமாக்கத்தையும் விரைவுப்படுத்துவது அதன் நோக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக, இத்திட்டப்படி, புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களை கட்டியமைத்து வளர்ப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது. ஒரு தொகுதி புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களை அரசு தேர்ந்தெடுத்து தகவல், நிதி, சேவை ஆகிய துறைகளில் அவற்றுக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் பல அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான நிர்வாக திறமைசாளிகளுக்கும் பயிற்சி அளித்து வளர்த்துள்ளது.

1 2