• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-28 16:28:38    
சீனாவில் புதிய உயர் தொழில் நுட்பத்தின் தொழில் மயமாக்கத்தை விரைவுப்படுத்தும் பணி

cri

தற்போது, சீனாவில், 54 தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் வளர்ச்சி மண்டலங்கள் உள்ளன. அவற்றில் பணி புரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்துக்கு மேலாகும். பல்வகை புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பிரதேசப் பொருளாதார அதிகரிப்பை விரைவுப்படுத்தும் முக்கிய ஆற்றலாக அவை மாறியுள்ளன.

தவிர, பல்வேறு பிரதேச அரசுகளும் தீபம் என்ற திட்டத்தின் மூலம், புதிய உயர் தொழில் நுட்பத் தொழில்களை வளர்க்கின்றன. எடுத்துக்காட்டாக குவாங் துங் மாநிலம் சீனாவில் வெளிநாட்டு வர்த்தகத்தில் பெரிதும் ஈடுபடும் மாநிலங்களில் ஒன்றாகும். சர்வதேச நிதி நெருக்கடியின் கடுமையான பாதிப்பைச் சமாளிக்க, இம்மாநில அரசு புதிய உயர் தொழில் நுட்பத் தொழில்களைப் பெரிதும் வளர்ப்பது தொடர்பான உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. குவான் துங் மாநிலத்தின் அறிவியல் தொழில் நுட்பப் பணியகத்தின் துணைத் தலைவர் chen xin கூறியதாவது

சர்வதேச நிதி நெருக்கடி சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளது. குவாங் துங் மாநிலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிகம். தற்சார்பு புத்தாக்கம் பற்றிய பணியறிக்கையை வலுப்படுத்தினோம். ஒருபுறம், 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துகின்றோம். மறுபுறம், உலகளவிலான திறமைசாலிகளையும் தொழில் நுட்பங்களையும் உட்புகுத்தும் பணியை மேற்கொள்கின்றோம் என்று அவர் கூறினார்.

சிச்சுவான் மாநிலத்தில் கடந்த ஆண்டு கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. பேரிடருக்குப் பிந்திய புதிய உயர் தொழில் நுட்ப மண்டலத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை இம்மாநிலம் அண்மையில் வகுத்துள்ளது என்று சிச்சுவான் மாநிலத்தின் அறிவியல் தொழில் நுட்பத் துறை அதிகாரி ரோ ச்சி பிங் தெரிவித்தார்.

அவர் எடுத்து கூறியதாவது

முதலாவதாக, உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அதிக பங்காற்றும் புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்துகின்றோம். இரண்டாவதாக தொழில் கட்டமைப்பை சரிப்படுத்துவது, தற்சார்பு அறிவுசார் சொத்துரிமையை மற்றும் மைய போட்டியாற்றலைக் கொண்ட உற்பத்தி பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தொழில் மயமாக்கப் போக்கிற்கு இணங்க, நிதியுதவியை அதிகரித்து, அவற்றை சந்தைப்படுத்த பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.

தீபம் என்னும் திட்டப்படி, இவ்வாண்டு சீனாவில் பல உலக நிலை அறிவியல் தொழில் நுட்ப மண்டலங்கள் கட்டியமைக்கப்படும். பொருளாதார வளர்ச்சியில் புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களின் ஆதார ஆற்றலை மேலும் அதிகமாக உயர்த்தும் வகையில், அவை சர்வதேச சந்தைக்குள் நுழைந்து, ஆராய்ச்சி நிறுவனங்களைக் கட்டியமைப்பதற்கு அரசு ஊக்குவிக்கும்.


1 2