• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-28 10:14:03    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை வணக்கம்.
தமிழன்பன் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு தவறாது கடிதங்கள் எழுதிவரும் நேயர்களுக்கு எங்களது பாராட்டுகள். உங்கள் கருத்துக்களை அனைவரும் அறிய செய்யும் இந்நிகழ்ச்சியில் கடிதங்கள் எழுதி உங்கள் கருத்துக்களை இடம்பெற செய்யுங்கள்.
கலை சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு அவை பற்றிய உங்கள் கருத்துக்களை கடிதம் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்
கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஒலிப்பதிவு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
......
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, மறைமலைநகர் மல்லிகாதேவி விளையாட்டு செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீன மக்களின் விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்துள்ளதை அறிய முடிந்தது. மகளிருக்கு புது உற்சாகம் பிறந்துள்ளது. உடல் கட்டுக்கோப்பு, உடற்பயிற்சிகளில் சீனர்களின் கவனம் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆகஸ்ட் எட்டாம் நாளை உடற்பயிற்சி நாளாக கடைபிடித்து தேசிய அரங்கான பறவைக்கூட்டில் சீன மக்கள் சாதனை படைக்க உள்ளதும் அறிந்தேன்.
தமிழன்பன் தொடர்வது, அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி புதுகை ஜி. வராதராசன் அனுப்பிய கடிதம். புதிய எரியாற்றல் பயன்படுத்தும் வாகனங்கள் சீனாவில் சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துகின்றன என அறிந்துபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த வாகனங்களின் உதிரி பாகங்களின் விற்பனையும், உற்பத்திப் பொருட்களின் தரமும் உயர்வாக இருப்பது சிறப்பு அம்சம். சீனாவில் தற்சார்பாக தயாரிக்கப்படும் வாகனங்களில் காணப்படும் சீன தொழில் நுட்ப வளர்ச்சி வேகம், பல உலக நாடுகளின் கவனத்தை கவரும் வகையில் உள்ளது.
கலை அடுத்து, சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி உத்திரக்குடி கலைவாணன் ராதிகா அனுப்பிய கடிதம். அன்றைய கட்டுரையில் சீனாவின் பெண் அறிவியலாளர்கள் என்ற தலைப்பை கேட்டதுமே, புரட்சி கவிஞர் பாரதிதாசனும், பாரதியும் நினைவுக்கு வந்தனர். இன்று உலகில் அனைத்து துறைகளிலும் அதாவது இருச்சக்கர வாகனங்கள் முதல் மேலே பறக்கும் விமானம் வரை ஓட்டுகின்ற அளவுக்கு பெண்கள் முன்னேறி விட்டார்கள். சீனாவில் பெண்கள் அறிவியல் முன்னேற்றம் கண்டு வருவது சாதனையாகியுள்ளது.


தமிழன்பன் ஆரணி பொன். தங்கவேலன் சீனக்கதை பற்றி அனுப்பிய கடிதம். பஞ்சத்தில் எழுந்த மாளிகை என்ற கதை கேட்டு வியப்புற்றேன். கோமகன் ஜிம்போ, அமைச்சர் யாமிங் ஆகியோர் பலருடைய வாழ்வுக்கு வழிகாட்டியதை இது விவரித்தது. சமுதாய வளர்ச்சிக்கு வழிகாட்டும் கதையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
கலை திருச்சி எம். தேவராஜா கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். இலகுவாக்கப்பட்டுள்ள சீன சமூக காப்புறுதி வரைவுச் சட்டம் பற்றி அறிந்தேன். எங்கு பணிபுரிந்தாலும் முதுமையில் தங்களது வாழ்விடத்திலிருந்தே காப்புறுதியை பெறும் வாய்ப்பு, பணியின்போது காயமுறுவோர், கடும் நோய்க்குள்ளாவோர், கர்ப்பிணிகள், வேலையில்லாதோர் என சமூகத்தில் அனைத்து தரப்பினரும் காப்புறுதி பெறவும், மிகவும் வறியோர் காப்புறுதிக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் வாய்ப்பு என அனைவரும் காப்புறுதியின் முழுநலன்களையும் பெறதக்க வகையில் இச்சட்டம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. முதியோர் நிறைந்த சீன சமூகத்தில் அமைதி நிலவவும், மகிழ்ச்சி பொங்கவும் அரசின் இந்த திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கருதுகிறேன்.


தமிழன்பன் அடுத்து, மதுரை அண்ணாநகர் என். இராமசாமி அனுப்பிய கடிதம். உலக பொருளாதார மீட்சியின் உந்து சக்தி என்ற செய்திதொகுப்பு கேட்டேன். சீனாவின் ஹைனான் மாநிலத்தின் போ ஆவ்வில் ஆசிய மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு கூட்டம் நடைபெற்றதை அறிந்தேன். பொருளாதார நெருக்கடியான ஆசியாவில் அறைகூவலும், நம்பிக்கையும் என்ற தலைப்பில் சீன தலைமை அமைச்சர் சிறப்புரை ஆற்றினார். உலக பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக ஆசியாவை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியது நிச்சயம் நனவாகும் என்று நம்புகிறேன்.
கலை தொடர்வது, சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் எழுதிய கடிதம். சின தைவான் இருகரைகளுக்கிடையே உறவு சங்கமம் ஏற்பட பாடுபட்ட சான்துபெ பற்றி அறிவிக்க கேட்டேன். இருகரை மக்களிடையே இணக்கமான சூழல் ஏற்பட பாடுபட்ட திரு சான்துபே அரசப்பணியாளராக இருந்து கொண்டு மேற்கொண்ட பணிகள் மலைக்க செய்தன. இதன் மூலம் அவருடைய நாட்டுபற்றுணர்வு வெளிப்படுகிறது.
தமிழன்பன் நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி கோவை எ.வி.தர்மலிங்கம் அனுப்பிய கடிதம். நேயர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, தேனைப்பொல் தித்திக்கும் திரைப்பட பாடல்களை வானலைகளில் மிதக்க செய்து சாதனை புரிவது மகிழ்வூட்டுகிறது. இரவுக்கு ஆயிரம் கண்கள், இராகங்கள் பதினாறு, யாரைத்தான் நம்புவதோ என்ற பாடல்கள் கேட்டவர் உள்ளங்களை கொள்ளை கொண்டன.

1 2