மின்னஞ்சல் பகுதி ஊட்டி, S.K.சுரேந்திரன் செய்தியில் பெய்சிங்கிலுள்ள தேசிய இனங்களின் மத்தலைவர்கள் ஜூலை 5ஆம் நாள் நடை பெற்ற உருகூர் பகுதில் திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் கண்டனம் தெரிவித்ததை அறிந்தேன். சட்டவியல் நிபுனர்களின் கருத்துக்களையும், இச்சம்பவம் ஏற்படுத்திய உயிர் மற்றும் உடல் இழப்புகளையும் செய்தித் தொகுப்புகளில் கேட்டேன். சீன தேசிய இனங்களின் ஒற்றுமையைப் பதிக்கின்ற இச் செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்கதே. தற்போது சீனாவின் உருமூச்சியில் கலவர நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு அமைதி திரும்பியுள்ளது மகிழ்ச்சி. புதுக்கோட்டை ஜி வரதராசன் சீன மக்கள் நாளேடு 8 ஆம் நாள் வெளியிட்ட விமர்சனக் கட்டுரையை பற்றி கேட்டேன். சின்ச்சியாங்கில் நிகழ்ந்த ஜீலை 5ம் நாள் வன்முறை சம்பவம் பற்றி விரிவாக அலசப்பட்டதும், இந்த வன்முறை மிக கடுமையான குற்றச்செயல் என்பதையும் அது விளக்கியது. சீனா சட்டரீதியில் ஆட்சி செய்யப்படும் சோஷலிச நாடாகும். சட்டத்தை மதித்து, மக்களின் உரிமை மற்றும் நலன்களை பேணிக்காக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ள தலையங்க கட்டுரை அருமை. நீலகிரி கீழ்குந்தா கே கே போஜன்
உருமுச்சி நகரில் ஜூலை 5 ஆம் நாள் ஏற்பட்ட கலவரத்தின் உண.மையான நிலையை உலகிற்க காட்டுவதற்கு 28 நாடுகளை சேர்ந்த 23 செய்தியாளர்களை அங்க அழைத்து சென்றதையும், மேலும் நீனாவை சேர்ந்த 226 செய்தியாளர்கயை அழைத்து சென்றதையும் செய்திகளில் கேட்டேன். வெளிநாட்டு தீய சக்திகளால் தூண்டிவிடப்ட்டதால் சீனா இத்தகைய உறுதியாக செயல்பட்டுள்ளது. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம். இந்த தீய சக்திகளின் முகதிரைகளை செய்தி சேகரிப்பில் திறப்பை எருவாக்கி செயல்படுத்திய சீன அரசை பாராட்டுகிநேன். மீனாட்சிபாளையம், கா. அருண் உறும்ச்சி நகரில் பொதுப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்டுள்ளதையும் அங்கு கடைகள் மற்றும் பிற அங்காடிகள் பெறுமளவு இயங்குகிவதையும் அறிந்து மகிழ்ந்தேன். விரைவாக செயல்பட்டு இயல்பு நிலையை மீட்ட உள்ளூர் அரசிற்கு பாராட்டுக்கள். வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சில அரங்குகள் பற்றியும் அங்கே நடைபெறப் போகின்ற கலைநிகழ்ச்சிகள் பற்றியும் அறிந்து மகிழ்ந்தேன். உலகப் பொருட்காட்சியில் இடம்பெறப் போகும் பிரிட்டன், பிரான்சு மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அரங்குகள் பற்றிய சுவையான தகவல்கள் தொகுக்கப்ட்டன. பொதுவாக, பல நாடுகள் ஒன்றுசேரும் இடத்தில், தங்களின் தனிச்சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாடும் அரங்குகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில், தத்தமது தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்தும் பல்வேறு நாடுகளின் அரங்குகள் கண்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. மேலும், உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலத்தில் சுமார் 20000 கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்ற தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.. விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
அன்றாட சீன மொழி நிகழ்ச்சி கேட்டேன். அதில் சீனமொழி வரலாறு, எழுத்து உச்சரிப்பு பற்றி கூறியது, சீன மொழியின் அடிப்படை இலக்கணம் என்று கூறலாம். ஒரு எழுத்து நான்கு விதமாக உச்சரிக்கப்படுகிறது. அப்படி உச்சரிக்கும்போது நான்கு வகையான பொருள் தரும் என்பதும் தெரியவந்தது. இந்தி மொழியிலும் இதேபோன்றுள்ளது. பள்ளிப்பட்டி சுப்ரமணியன் சீன தலைமையமைச்சர் வென்சியாபாவும் ஜெர்மனி தலைமையமைச்சர் மொர்கல் அம்மையாரும் தொலைபேசி மூலம் இரு தரப்புறவு பற்றியும் பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர் என்பதை இணையத்தளத்தில வாசித்தேன். சீன அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதில் முழு கவனம், செலுத்துவதுடன், பொருளாதாரம், வர்த்தகம், கூட்டாக வளர்ச்சி அடைவது, அண்டை நாடுகளுடன் இணைந்த வளர்ச்சி ஆகியவற்றையும் அடிப்படையாக கொண்டுள்ளது. சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி உலகில் சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் பட்டணம் முதல் பட்டி தொட்டி வரை இன்றையகாலத்தில் பரந்து விரிந்து பதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சீனநடுவண் அரசு கிராமப்புற நுகர்வு சந்தையினை விரிவாக்கும் பரந்த நோக்கத்தோடு மின் சாதனங்களை வாங்கும் விவசாயிகளுக்கு சுமார் 2500 கோடி யுவான் தொகையினை மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது இம்முயற்சி, நெருக்கடியைச் சமாளிக்க வழங்கப்படும் வாய்ப்புகள். சீன விவசாயிகள் இந்த வாய்ப்புக்களை இறுகப் பற்றி கொள்வார்கள் என்பது உறுதி.
முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் செய்திதொகுப்பில், இத்தாலியில் பயணம் மேற்கொண்ட சீன அர்சுத்தலைவர் ஹூசிந்தாவ் அவர்களின் பயணம் ஆக்கப்பூர்வமாக இருப்பதை அறிந்தேன். இருநாட்டுக்கும் இடையில் பயன்மிக்க எட்டு உடன்படிக்கைகளை கையெழுத்திட்டதாக அரசுத்தலைவர் ஹூசிந்தாவ் அவர்களும், இத்தாலி அரசுத்தலைவரும் நிறைவேற்றி இருக்கின்றார்கள். பொருளாதாரம், வர்த்தகம், பன்பாடு, பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளின் ஒப்பந்தங்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மதுரை அண்ணாநகர் ரா.அமுதாராணி இன்றைய உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை மிக முக்கியமானவைகளாகும். இந்த பிரச்சனையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பங்குண்டு. மக்களை ஈடுபடுத்தி கழிவுப்பொருட்களை குறிப்பாக அடுக்களை கழிவுப்பொருட்களை கையாளும் முறை பெய்ஜிங்கில் அறிமுகமாகியிருப்பது ஒரு முன்மாதிரியான திட்டம். இது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
1 2
|