• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-29 11:30:57    
மலை பகுதியில் பிறந்து உலக புகழ் அடைந்துள்ள Long Yong Tu ஆ

cri

இதற்கிடையில் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின் சீனாவுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விவாதமும் சீனாவில் ஓயவில்லை. Long Rong Tu கடுமையான நிர்ப்பந்தங்களை எதிர்நோக்கினார். இருந்தாலும் தமது இலட்சியத்தை கைவிடாமல் அவர் தொடர்ந்தார்.

2001ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், கத்தார் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பின் 143வது உறுப்பு நாடாக சீனா மாறியது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நீண்டகால முயற்சிகள் முடிவுக்கு வந்தன. Long Yong Tu கூறியதாவது:

"2001ஆம் ஆண்டு, சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது. வெளிநாட்டுத் திறப்பு அளவு விரிவாகியும் இருந்தது. உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தை போக்கில், பல தொழில்கள் வெளிநாடுகளுக்குத் திறந்து வைக்கப்பட்டிருந்தன. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது, சீனா தன்னை செவ்வனே ஆயத்தம் செய்திருந்தது. இதனால் சீனாவின் தொழில்களுக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை"என்றார், அவர்.

தலைமை பிரதிநிதியாக, உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்வதற்கான முழு போக்கில் Long Yong Tu பங்கெடுத்தார். அவரது வாழ்நாள் முழுவதிலும் இது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, வரலாற்று அரங்கில் தன்னை ஈடுபட செய்தது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு இல்லை என்றால், உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தை இல்லை. உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தை இல்லை என்றால், என்னைப் போன்றவர்கள் குறிபிட்ட பங்காற்றியிருக்க முடியாது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி, நாட்டுக்காக பங்காற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது" என்றார், அவர்.

1 2