
நாட்டுக்காக பங்காற்றும் Long Yong Tuவின் விருப்பம், உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையின் முடிவுடன் நிற்கவில்லை. 2003ஆம் ஆண்டு, Bo Ao ஆசிய மன்றத்தின் தலைமைச் செயலாளராக Long Yong Tu நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள், ஆசியா மீது கவனம் செலுத்தும் பல்வேறு நாடுகளின் அதிகாரிகளும் தொழில் முனைவோரும் Bo Aoவுக்கு வந்து, ஆசியாவின் பொருளாதார எதிர்காலம் பற்றி விவாதிப்பதற்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.
இம்மன்றத்தில் ஆசியாவின் தெளிவான குரலை எழுப்ப அவர் பாடுபடுகிறார். இம்மன்றம் மூலம் முதல் தர தொழில் முனைவோரை சீனாவில் உருவாக்க வேண்டும் என்றும், சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் இணைவதற்கு அவர்கள் பங்காற்ற வேண்டும் என்றும் Long Yong Tu விருப்பம் தெரிவித்தார்.. 1 2
|