 090731-mz-11959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நீங்கியது. அப்போது லாசாவின் கிராமபுறத்தில் வாழ்ந்த Kalzang Yeshe, திபெத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்கூடாக பார்த்துள்ளார். மிக முக்கியமாக, அவர்களுக்கு, பள்ளியில் படிக்கும் வாய்ப்பு அப்போது தான் கிடைத்தது. அவர் கூறியதாவது
விடுதலைக்கு முன், திபெத்தின் கல்வி, பின்தங்கிய நிலையில் இருந்தது. பரந்துபட்ட பண்ணை அடிமைகளின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிக்கும் வாய்ப்பு இல்லை. அதற்கான உரிமையும் இல்லை. வசதியும் இல்லை. 1958ம் ஆண்டு, லாசா நகரில் நிறுவப்பட்ட 2வது பள்ளியில் நான் கல்வி பயின்றேன். எனது உணவு, உடை, பாடநூல் முதலியவற்றிக்கு சீன அரசு பொறுப்பேற்றது என்று அவர் கூறினார்.
இடைநிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற அவர் பணி புரிய தொடங்கினார். பின்னர், மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தில் han-திபெத் மொழிபெயர்ப்பு துறையை முக்கியப்பாடமாக Kalzang Yeshe படித்தார். 1978ம் ஆண்டு, சீனச் சமூக அறிவியல் கழகத்திலுள்ள பழமையான திபெத் மொழியின் ஆய்வு மாணவர்களில் ஒருவராக Kalzang Yeshe வெற்றிகரமாக மாறினார். தேர்ச்சி பெற்ற பிறகு, திபெத் சமூக அறிவியல் கழகத்துக்கு திரும்பி, பணிபுரிவதை அவர் தேர்ந்தெடுந்தார்.
திபெத் சமூக அறிவியல் கழகத்தில் நுழைந்த பிறகு, Kalzang Yeshe திபெத் தேசிய இனத்தின் பழம்பெரும் நூலியல் துறை பற்றிய ஆய்வுக்கு முக்கியமாக பொறுப்பேற்றார். "திபெத் தேசிய இனப் பண்பாட்டு வரலாற்றிலுள்ள ஒரு புதிய அத்தியாயம்", "திபெத் தேசிய இனப் பண்பாட்டு வடிவங்கள்" பற்றிய ஆய்வு முதலிய ஆய்வுக்கட்டுரைகளை அவர் வெளியிட்டார். அத்துடன், லட்சக்கணக்கான திபெத்-han மொழி எழுத்துக்கள் கலந்த திபெத்தின் ஒட்டுமொத்த வரலாறு முதலிய முக்கிய நூல்களை எழுதியதிலும் மொழிபெயர்ப்பிலும் அவர் பங்கெடுத்தார்.
1 2
|