• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-31 14:39:01    
செழுமையான திபெத் பண்பாடு

cri

திபெத்தின் பழைய சிறப்பு நூல்களை பரவல் செய்ய, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் இறுதியில், பழம்பெரும் நூல் வெளியீட்டகத்தை உருவாக்கியது. வெளியிடப்பட்ட பழைய நூல்களையும் மரப்பலகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளையும் ஆராய்வது கல் வெட்டுகளில் காணப்படும் பொன் நிற எழுத்துக்களையும், ஆராய்வது அவ்வெளியீட்டகத்தின் முக்கிய பணியாகும். 2003ம் ஆண்டு, Kalzang Yeshe, இவ்வெளியீட்டகத்தின் தலைவராக மாறினார். அவர் கூறியதாவது

பனி மூடிய இப்பகுதியின் இலக்கிய களஞ்சியத்தின் பெயரில், ஏறக்குறைய 50 வகை நூல்களை இந்த வெளியீட்டகம் வெளியிட்டது. அத்துடன், அவை, மிகவும் உயர்ந்த மதிப்பு கொண்டவை. சர்வதேச திபெத்தியல் துறையில், அவை வரவேற்கப்படுகின்றன. அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்திலும், இந்த நூல்களை காணலாம். ஜப்பான், பிரிட்டன், நார்வே உள்ளிட்ட பிற நாடுகளும், இந்த நூல்களை வாங்கி வைத்துள்ளன.

1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், திபெத்தின் பண்பாட்டுப் பாதுகாப்புக்கு சீன நடுவண் அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு, திபெத்திலுள்ள பல்வேறு இடங்களின் வரலாற்று முக்கியத்துவமும் அழகும் வாய்ந்த காட்சித்தலங்கள், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் ஆகியவற்றை உரிய முறையில், பேணவும் கையேற்றவும் ஆவன செய்துள்ளன. திபெத்தின் புகழ் பெற்ற கெசார் மன்னர் காவியம் பற்றி பேசுகையில், அவர் கூறியதாவது

பழைய திபெத்தில் ஒருவர் கூட கெசார் மன்னர் காவியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அந்நிலைமையை சீர்படுத்துவதற்கு போதிய வசதி இல்லை. அப்போதைய கல்வி, பின்தங்கி இருந்தது. பலரும் கல்வி கற்கவில்லை. கெசார் மன்னர் காவியம் பற்றி அறிவது, சாத்தியமற்றதாக இருந்தது. Kalzang Yeshe கூறியதாவது

சீனாவின் திபெத், திபெத்தியல் ஆராய்ச்சியின் தாய்வீடாகும். முன்பு, மேலை நாடுகள், சர்வதேசத் திபெத்தியல் கூட்டத்தை நடத்தி வந்தன. ஆனால், இப்போது, சர்வதேசத் திபெத்தியல் செயற்குழுவில் சீன அறிஞர்களும் இடம்பெறுகின்றனர். சீன திபெத்தியல் அறிஞர்களுக்கு திபெத்தியல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மேலை நாடுகள் அழைப்பு விடுக்கின்றன.

பல்வேறு நாடுகளின் சிறப்பு தேசிய பண்பாட்டுக்கு மேலை நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. வெளிநாட்டில், தலாய்லாமா குடியிருந்து, மேலை நாடுகளின் ஆதரவைப் பெற்று, தனது அரசியல் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார். Kalzang Yeshe மேலும் கூறியதாவது

உண்மையில், திபெத்தில் நாம் வாழ்கின்றோம். திபெத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களையும் நாம் கண்டு அனுபவிக்கின்றோம். இப்போது, திபெத் பண்பாடு, முன் காணாத வளர்ச்சியையும் செழுமையையும் எட்டியுள்ளது என்றார் அவர்.


1 2