• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-05 09:09:32    
தன்னார்வத்துடன் மேற்குப் பகுதிக்குச் சேவைபுரியும் இளைஞர்

cri

தன்னார்வத் தொண்டர் என்பது, புனிதமான, சாதாரண சொல் ஆகும். எங்கள் அருகில் வாழும் சாதாரண மக்களான அவர்கள், பிரதி பலனை எதிர்பாராமல் தங்களது இளமையையும் உற்சாகத்தையும் சமூகத்துக்கு வழங்கி, மாபெரும் அன்பை வெளிப்படுத்துகின்றனர். சீனாவில் இளைஞர்கள் சிலர் பெரிய நகரத்தில் பணிபுரிந்து வாழும் வாய்ப்பைக் கைவிட்டு, தன்னார்வத் தொண்டர்களாக மேற்குப் பகுதிக்குச் சென்று சேவைபுரிகினறனர்.

இவ்வாண்டு Li Wei என்பவருக்கு வயது 29. மேற்குப் பகுதிக்கு தன்னார்வத்துடன் சேவைபுரியும் திட்டத்தில் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களில் இவரும் ஒருவர். 6 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள Xu Zhou ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், தனது வளமான குடும்பம் தேடி வழங்கிய வேலை வாய்ப்பை மறுத்து, மேற்குப் பகுதியிலுள்ள Shaan Xi மாநிலத்தின் San Yuan மாவட்டத்தில் ஆங்கில மொழி ஆசிரியராக வேலை செய்ய அவர் மனஉறுதியோடு முடிவு செய்தார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது முடிவை எதிர்த்தனர். அவரது காதலி கூட இதனால் அவரை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் முடிவை மாற்றவில்லை. மேற்குப் பகுதி மீது அவர் எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்.

1 2