

ஆனால் அங்குள்ள கடினமான சூழ்நிலை, அவரது கனவை அசைக்க பார்த்தது. நல்ல தூக்கம் இல்லை தவிர, உள்ளூர் உணவுகளை உட்கொள்ள அவர் விரும்பவில்லை. ஆனாலும் இந்த இன்னல்களின் காரணமாக அவர் தன்னார்வத் தொண்டராக மேற்குப் பகுதியில் சேவைபுரியும் பணியை அவர் கைவிடவில்லை. அங்கே 2 ஆண்டுகளாக வேலை செய்தார். சேவைக் காலம் நிறைவுற்ற பின்னரும், சொந்த ஊரான Xu Zhouவுக்கு அவர் திரும்பவில்லை. மேற்குப் பகுதியில் தங்கி உண்மையாகவே மேற்குப் பகுதி ஆசிரியராக பணிபுரிய Li Wei தெரிவு செய்தார். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்று, தனது வாழ்வின் மதிப்பை உணர்வது தான் தாம் தங்கியிருப்பதன் காரணமாகும் என்று அவர் கூறினார்.
மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு Li Wei முக்கியத்துவம் தருகிறார். அங்களுள்ள மாணவர்கள் துவக்கப் பள்ளியில் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை. எனவே ஆங்கில மொழியை எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு தெரியாது. மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்ய, Li Wei தனது ஊதியத்தை செலவிட்டு ஆங்கில பத்திரிகைகளை வாங்கினார். வார இறுதியில் மாணவர்களை வெளியே அழைத்து சென்று, சிறு ஆற்றின் பக்கத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆங்கில பாடல் பாடி, விளையாடினார்.
தற்போது உள்ளூர் இளம் பெண் ஒருவரை Li Wei திருமணம் செய்து, மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கியுள்ளார். உண்மையான மேற்குப் பகுதி ஆசிரியர் என அவர் தன்னை அழைக்கிறார். அர்த்தமுள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவதாகவும், மேற்குப் பகுதியில் தனது வாழ் நாளின் இலட்சியத்தைத் தேடியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த இலட்சியத்தில் அவர் தன்னைப் பற்றி அதிகமாக அறிந்து கொண்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தன்னார்வத்துடன் மேற்குப் பகுதிக்குச் சேவைபுரியும் திட்டத்தின் மூலம், சீனாவின் இளம் தலைமுறையினர் சமூகப் பொறுப்புணர்வை அதிகரித்து, நாடு மற்றும் தங்களது வளர்ச்சியை இணைத்து, மேற்குப் பகுதியில் பங்காற்றி வருகின்றனர். இளமை கால வாழ்க்கையை ஒளிவாச செய்கின்றனர். 1 2
|