• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-10 11:15:24    
தலைக்கு மேல் ஆயிரம் கண்கள்

cri

எங்கேயோ கண்காணாத இடத்தில் விபத்துக்குள்ளாகியோ காணாமலோ போகின்ற விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை அவை ஏறக்குறைய எந்த பகுதியில் காணாமல் போயிருக்கிறது என்பதை சில மணிநேர ஆய்வில் கண்டுபிடித்து விடுகின்றனர். உடனடியாக அப்பகுதியில் தேடுதல் நடத்த மீட்புதவி குழுக்களை அனுப்புகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது என்பது நமக்கு வியப்பளிப்பதாக இருக்கலாம். ஆனால் காணாமல் போகின்ற விமானங்கள் அல்லது உலங்கு வானூர்திகள் போன்றவை அவற்றின் தொடர்பு நிலையங்களோடு கடைசியாக கொண்ட தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் வழிக்காட்டல் போன்ற பல்வேறு ஆய்வு முறைகள் இந்த வசதியை நமக்கு தருகின்றன. மனிதர்கள் புகமுடியாத காடுகளில் விமானங்கள் விழுந்தாலும் இந்த சேவையை பயன்படுத்தி கண்டுபிடித்து விடலாம்.

இதற்கு பயன்படுத்துகின்ற வசதியை தான் Global Positioning System (GPS) அதாவது புவியில் இடம் காட்டும் அமைப்பு என்கிறார்கள். இது செயற்கைக்கோள்கள் மூலம் வழிகாட்டுகின்ற முறையாகும். இந்த சேவையை பயன்படுத்தி உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இந்த புவியில் இடம் காட்டும் அமைப்பு 24 முதல் 31 செயற்கைகோள்களை கொண்டு இயங்கும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பின் ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஆறு சுற்றுவட்டப் பாதையில் (Orbital Plane) பிரிக்கப்பட்டு புவியை சுற்றுகின்றன. ஒவ்வொரு செயற்கைக்கோளும் புவியின் தரை மட்டத்திலிருந்து 20,200 கிமீ உயரத்தில் (Altitude) மணிக்கு 11,500கிமீ வேகத்தில் புவியை சுற்றிவருகின்றன. அதாவது ஒவ்வொரு செயற்கைக்கோளும் பூமியிலிருந்து குறைந்த தூரமாக 20,200 கிமீட்டரை 12 மணிக்கொருமுறை தொட்டுச் செல்லும்.

ஒரு குறிப்பிட்ட பொருளையோ இடத்தையோ பற்றிய விபரங்களை அறிய தருவது தான் இவ்வமைப்பு முறையின் மிக முக்கிய வேலை. இதன் மூலம் உலகின் எந்த ஒரு பகுதியின் இருப்பிடத்தகவலையும், எல்லா காலநிலையிலும் மிகவும் தெளிவாக பெறமுடியும். இந்த அமைப்பிலுள்ள வழிகாட்டும் செயற்கைக் கோள்கள் விமானங்கள், கப்பல்கள் போன்ற வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. இதற்கு வாகனங்கள் ஒரு தனிப்பட்ட வானலை அனுப்பி, வானலை வாங்கி [Radio Transmitter, Radio Receiver] மின்னணு வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சிமிக்க உலகில் அசைக்க முடியாத இடத்தை பெற்றிருப்பது GPS (Global Positing System). அதாவது புவியில் இடம் காட்டும் அமைப்பு. வானத்தில் பறக்கும் விமானம் முதல் கையில் உள்ள செல்லிடபேசி வரை இதன் பங்கு உண்டு

வான் வழியாகவும், நிலத்திலும் நீரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டுமானால், அது எங்கே இருக்கிறது, அதனை அடைகின்ற வழிகள் போன்ற தகவல்களை புவியில் இடம் காட்டும் அமைப்பு தான் வழங்குகிறது. விமானத்தில் மேகங்களின் ஊடாக புகுந்து செல்லும்போது நீல வானம் தான் எங்கும் பளிச்சிடும். நாம் எங்கிருக்கிறோம் என்பதை நமது புலன்களால் அறிந்து கொள்ள இயலாது. அதுபோல கடலில் கப்பலில் பயணம் செய்யும்போது நாலாப்புறமும் சூழ்ந்திருக்கும் கடல் நீர்பரப்பையும், வானத்தையும் தான் நாம் பார்க்கமுடியும். எங்கே இருக்கின்றோம், எந்நாட்டை நோக்கி செல்கின்றோம் என்ற தகவல்களை இந்த புவியில் இடம் காட்டும் அமைப்பின் வழிகாட்டும் செயற்கைக்கோள்கள் மூலமே பெற்றுக்கொள்வது சாத்தியமாகிறது.

விபத்து அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்ற சில நிமிடங்களில் காவல்துறை, அவசர மருத்துவ வாகனம், தீயணைப்புப்படை ஆகியவை வந்து சேரும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், அவ்விடத்திற்கு அருகில் எந்த வாகனம் உள்ளதோ அதனை புவியில் இடம் காட்டும் அமைப்பு மூலம் அறிந்து உடனடியாக அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். எனவே கண்காணிப்பு தொடர்பான சேவைகளில் புவியிடங்காட்டி மிகவும் பயன்பட்டு வருகிறது.

1 2