• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-10 11:15:24    
தலைக்கு மேல் ஆயிரம் கண்கள்

cri

கூகுள் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட நகரின் பெயரை போட்டு வரைபட பக்கத்தில் தேடினால் அந்நகரத்தின் வரைபடத்தை, குறுகிய மற்றும் விரிந்த வடிவங்களில் பெற முடியும். இந்த வரைபடம் செற்கைக்கோள் கூலமாக பெறப்படும் நிழற்ப்படமாக அமைவதால் சாலையில் ஓடும் ஒரு காரை கூட எளிதில் அடையாளம் காணலாம். இதில் கிடைக்கக்கூடிய செயற்கைக்கோள் படம் புவியில் இடம் காட்டும் அமைப்பு வழங்கும் பல சேவைகளில் ஒன்றாகும். நகர வரைபடங்களை மிகவும் துல்லியமாக காட்டுவதில் இந்த புவியில் இடம் காட்டும் அமைப்பு சேவை பெரும்பங்கு வகிக்கிறது. மலைகள், நதிகள், காடுகள், சாலைகள், விலங்குகள், உள்பட அனைத்து தகவல்களையும் இதன்மூலம் பெறமுடியும். மிகவும் சரியான நேரத்தை வழங்குவதற்கும் இந்த புவியிடங்காட்டி உதவுகிறது. செயற்கைக்கோளிலுள்ள அணுக்கடிகாரம் மூலம் புவியில் இடம் காட்டி இந்த சேவையை அளிக்கிறது.

காம்பஸ் என்பது சீனா உருவாக்கிவரும் புவியில் இடம் காட்டும் அமைப்பாகும். 2020 ஆம் ஆண்டு முதல், காம்பஸ் புவியில் இடம் காட்டும் அமைப்பு முறை மூலம் சீனா இலவசமாக சேவை வழங்கும் என்று காம்பஸ் புவியில் இடம் காட்டும் அமைப்பின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அரசுசார் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகவும் இதன் சேவைகள் அமையும். சீனா இதுவரை இரண்டு காம்பஸ் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேலும் 10 செயற்கைக்கோள்களை அனுப்பவுள்ளது. இந்த 12 செயற்கைக்கோள்களும் சீனாவின் அண்டைய பிரதேசங்களை சரியான காட்டுகின்ற திறனை பெற்றிருக்கும். இதுவே காம்பஸ் செயற்கைக்கோள் திட்டத்தின் முதல் கட்ட செயல்திட்டமாகும். இந்த முதல் கட்ட திட்டப்பணிக்கே ஆயிரம் கோடி யுவானுக்கு மேல் செலவாகிறது. புவியிடங்காட்டி சேவையை உலக வலைபின்னலாக அமைப்பது இரண்டாவது கட்ட பணியாக இருக்கும். மொத்தம் 30 முதல் 35 செயற்கைக்கோள்கள் இணைந்து வழங்கும் இந்த சேவையை வழங்கும்.

அமெரிக்க புவியில் இடம் காட்டும் அமைப்பு முறை அதன் பாதுகாப்பு துறையால் உருவாக்கப்பட்டு, அமெரிக்க விமானப்படையின் 50 வது பிரிவால் மேலாண்மை செய்யப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு இது முழுமையாக செயல்பட தொடங்கியது. குளோனாஸ் என்பது ரஷியாவின் புவியிடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பாகும். இதுவரை 19 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ள ரஷியாவின் இந்த புவியிடங்காட்டி அமைப்பு முழுமையாக செயல்படக்கூடிய நிலையை படிப்படியாக அடைந்து வருகிறது. கலிலியோ புவியிடங்காட்டி அமைப்பு திட்டம், 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய விண்வெளி ஆணையம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியாகும். திட்டப்படி 2013 ஆம் ஆண்டு இது இயங்க தொடங்கும்.

இரவுக்கு ஆயிரம் கண்கள். பகலுக்கு ஒன்றே ஒன்று என்று விண்மீன்களையும் சூரியனையும் குறிப்பிடுவார்கள். இன்று பகலிலும் இரவிலும் வானத்தில் பல்லாயிரம் கண்கள். செயற்கைக்கோள்களாய்.


1 2