• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-11 09:54:41    
நேயர்களின் கருத்துக்கள்

cri

வாணி: வணக்கம். எமது நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சரமாக்கி ஒலியேறும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை எழுதியனுப்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். நேயர்களாகிய நீங்கள் அனுப்பும் கடிதங்களே எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் அருமருந்தாகும்.


வாணி: ஆம். எனவே தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேளுங்கள். கேட்பதோடு நில்லாமல் ஒரு சில வரிகளில் நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதியனுப்புங்கள். வந்து சேரும் கடிதங்களை கூடுமானவரை நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ள நாங்கள் முயற்சிப்போம்.
க்ளீட்டஸ்: சரி, இனி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.
கடிதப்பகுதி:
வாணி: நிகழ்ச்சியின் முதல் கடிதம் சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி எழுதியது. ஜூன் திங்கள் 20ம் நாள் ஒலிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியை கேட்டேன். தமிழ்ப்பிரிவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் நேயர்களில் முன்னோடியான, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு. எஸ். செல்வம் "அருமையான திபெத்" எனும் இணைய பொது அறிவுப்போட்டியில் சிறப்புப்பரிசு பெற்று சீனாவுக்கு பயணமாக வரப்போவதை அறிவித்தீர்கள். இப்பரிசு பெறுவதற்கு பொருத்தமான நபர் அவரே என்றால் அது மிகையல்ல. அவரை மனதார பாரட்டுகிறேன்.


க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எஸ். வி. துரைராஜாவும் சிறப்புப் பயணமாக சீனாவுக்கு அழைக்கப்பட்ட நேயரை பற்றியே எழுதியுள்ளார். ஆனால் இது அழகான சிச்சுவான் பொது அறிவுப்போட்டிக்காக சிறப்புப்பரிசு பெற்ற முனுகப்பட்டு பி. கண்ணன்சேகரை பற்றியது. மே திங்கள் 25ம் நாள் சிறப்புப் பரிசு பெற்று சீனாவில் பயணம் மேற்கொண்ட கண்ணன் சேகர் அவர்கள் தன்னுடைய பயண அனுபவங்களை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொண்டதை கேட்டு மகிழ்ந்தேன். சிச்சுவான மாநிலத்தில் அவர் கண்டவற்றை பற்றி விளக்கியமை மற்ற நேயர்களுக்கும் பயனுள்ளதாய் அமைந்தது, பாராட்டுக்கள்.
வாணி: அடுத்து நேயர் விருப்பம் நிகழ்ச்சி குறித்து குடியாத்தம் டி. சுடர்க்கொடி எழுதிய கடிதம். நேயர் விருப்பம் நிகழ்ச்சி ப்ரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்பட்டாலும், நேயர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மே திங்களில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் "உன் தலை முடி உதிர்வதைக் கூட", " ஒன்றே குலமென்று பாடுவோம்" ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. இதில் ஒன்றே குலமென்று பாடுவோம் என்ற பாடல் மக்கள் அனைவரும் சமமென கூறும் பாடலாகும். மனித இனத்தை மாண்புடையதாக்கும் இத்தகைய பாடல்களை சீன வானொலி தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பியதற்கு நன்றி.


க்ளீட்டஸ்: சின்னவளையம் கு. மாரிமுத்து மே 21ம் நாள் இடம்பெற்ற ஒரு செய்தி பற்றி எழுதிய கடிதம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உதவக்கூடிய இயந்திர மனிதனை சீனாவில் தயாரிக்கப்படுவது குறித்த செய்தியை கேட்டேன். சீனாவில் உள்ள 12 விழுக்காட்டு முதியோர் இதனால் பயனடைவார்கள் என்று கேட்டபோது 60 வயதாகும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல்கள் பாடவும், விளையாடவும், சிறிய உதவிகளைச் செய்யவும் இந்த இயந்திர மனிதனால் முடியும் என்பது முதியோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாணி: மதுரை திருமங்கலம், பி. கதிரேசன் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். அவரையை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையின் தயாரிப்பை நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். அத்தோடு சைவ உணவு உடலுக்கு கேடு விளைவிக்காது. உடலுக்கு தீங்கேற்படுத்தும் சர்க்கரை மற்றும் மாவுப்பொருட்களை தவிர்த்து உடல் நலத்தை பேணவேண்டும் என்று தகவல் தந்தது பயனுள்ளதாக இருந்தது நன்றி.


க்ளீட்டஸ்: பொள்ளாச்சி எஸ். செந்தில்குமார் எழுதிய கடிதம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கோவை தெ. நா. மணிகண்டனின் நேர்காணலை கேட்டேன். அவரது குடும்ப, சீன வானொலி கேட்கும் அனுபவம், நேயர் வட்ட நட்பு, நேயர் மன்றக் கருத்தரங்கு ஆகியவை குறித்து மணிகண்டன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டது சிறப்பு. மின்னஞ்சலை விட வான் அஞ்சலை அதிகமாக அனுப்பவேண்டும் என்று அவர் கூறியது அருமை.
வாணி: திருச்சி எம். தேவராஜா எழுதிய கடிதம். நலவாழ்வு பாதுகாபு நிகழ்ச்சியில் சியாமன் பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களை கேட்டேன். நிகழ்ச்சியின் வாயிலாக சீனாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பணி பற்றி அறிமுகப்படுத்தவுள்ளது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இளமைக்காலத்தில் இது போன்ற தகவல்கள் அறிமுகமாகி இருக்கக்கூடாதா என்ற ஏக்கமேற்பட்டது. இருப்பினும் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு இது பயன் தரும் என்பதில் மகிழ்ச்சியே.

1 2