• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-11 09:54:41    
நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி பற்றி பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். ஜூன் 26ம் நாள் ஒலிபரப்பான சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில், நிலச் சுதந்திரச் சட்டம், திபெத் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வுகள் பற்றி தேன்மொழி அறியத் தந்தார். பயனுள்ள தகவல்கள், நன்றி.
விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
1.8.2009 அன்று தமிழ்ப்பிரிவின் 47 ஆம் ஆண்டு துவக்க நாள் ஆகும். கடந்த 46 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு நிகழ்ச்சியில் இருந்தும், நேயர்களுடன் உறவில் உயர்ந்தும் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை அடைந்து தலைசிறந்து விளங்குகிறது தமிழ்ப்பிரிவு. இந்த உயர்விற்கு காரணம் தமிழ்ப்பிரிவு பணியாளர்களும் அவர்களின் பணியையும் நிகழ்ச்சியையும் விமர்சனம் செய்யும் நேயர்களுமே. இவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
ஜுலைத் திங்கள் 24 ஆம் நாள் இடம்பெற்ற •வெளிநாட்டவரின் பார்வையில் சீனா• என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ந்தேன். சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீனாவின் வளர்ச்சியைக் கண்டு வியந்து எழுதும் வெளிநாட்டவரின் கட்டுரைகள் வாரந்தோறும் Beijing Review இதழில் இடம்பெறுவதுண்டு. அவற்றை நான் படிக்கும்போதெல்லாம், அதன் சுவை மற்ற நேயர்களுக்கு சென்றடையுமோ என நினைத்ததுண்டு. ஒரு சிறப்பு நிகழ்ச்சியை துவக்கலாமோ என நினைத்ததும் உண்டு. அந்நிலையில், வெளிநாட்டவரின் பார்வையில் சீனா என்னும் புதிய நிகழ்ச்சியைத் துவக்கியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.
மீனாட்சிபாளையம், கா. அருண்
23.ஜுலை.2009, வியாழன், அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு.
சீனா உருவாக்கியுள்ள உலகின் மிகப்பெரிய தொலை நோக்கியான "லாமோஸ்ட்" தொலைநோக்கி அமைந்துள்ள இடம், அதன் உருவளவு மற்றும் அதனால் ஏற்படும் பயன் ஆகியவைபற்றி வாணி அவர்கள் அறியதந்தார். அதேபோல சுற்றுலா மூலம் வளம் அடைந்துவரும் திபெத்தின் "நாம்சே" கிராமத்தின் தனிச்சிறப்புக்களை சீனாவின் இன்ப பயணம் நிகழ்ச்சியில் கூறக்கேட்டு மகிழ்ந்தேன்.


நாகர்கோயில், ஸ்டெல்லா ஷர்மிலா
சீன வெளியுறவு அமைச்சர் 29 ம் நாளில் ஜப்பான் தூதரை வரவழித்து rabiya kadeer -இக்கு பயண அனுமதி வழங்கிய ஜப்பான் அரசை கண்டித்தது நியாயமானதாகும். இது போன்ற பிளவு சக்திகளை உலக நாடுகள் அனைத்தும் தனிமை படுத்த வேண்டும்.
புதுக்கோட்டை, G. வரதராசன்
சீனக் கிராமப்புறங்களின் சுகாதாரச் சீர்திருத்தம் பற்றிய அறிக்கையை உலக வங்கி ஜுலை 23 ம் நாள் பெய்சிங்கில் வெளியிட்டது பற்றி அறிய முடிந்த்து.சீனாவில் நடைமுறையில் உள்ள புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறையானது பாராட்டைப்பெறும் வண்ணம் அமைந்துள்ளதோடு சில யதார்த்த முன்மொழிவுகளையும் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது。இவ்வாண்டு ஏப்ரல் திங்கள், சீன அரசு மருத்துவ சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தை வெளியிட்டது. அடுத்த 3 ஆண்டுகளில், அனைத்து நகர மற்றும் கிராமவாசிகளும் அடிப்படை மருத்துவ சுகாதார முறைமையை அனுபவிப்பர் என்றும் இத்திட்டம் குறித்து உலக வங்கியின் மனித குல வளர்ச்சி மற்றும் பொது சேவை ஆய்வகத்தின் தலைவர் Adam Wagstaff மேலும் கூறிய தகவல்கள் பயன்மிக்கவை.


செந்தலை, என்.எஸ். பாலமுரளி
24.7.2009 அன்று செய்திகளில் மிக முக்கியமான சீன உறவு பற்றி கேட்டேன். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடை உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை கவனத்தில் கொண்டு இருநாடுகளும் செயற்பட்டு வருகின்றன. சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பது, சீன அமெரிக்க இராணுவப் பரிமாற்றத்தை முன்னேற்றுவது போன்றவை முக்கிய பணிகளாக இருக்க வேண்டும். சீனாவில் உள்ள அமெரிக்க துாதர் ஹான்.எம்.ஷின்டஸ்மன் இருநாட்டுறவில் நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன்
27.07.2009 - ல் இடம் பெற்ற சீன-ரஷிய கூட்டு இராணுவப் பயிற்சி என்ற செய்தித் தொகுப்பு கேட்டேன். அதில் 26 - ம் நாள் சீனாவின் ஷென்யாங்கில் வெற்றிகரமாக முடிவடைந்தத."அமைதி கடப்பாடு - 2009" என்ற பயங்கரவாத எதிர்ப்புக்கான சீன - ரஷிய கூட்டு இராணுவப் பயிற்சி பற்றியும், சீனாவும் ரஷியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், பயங்கரவாத எதிர்ப்பை முக்கியமாகக் கொண்டு அமைதி கடப்பாடு என்ற தலைப்பில் நடத்திய பெருமளவு கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும் என்பது பற்றியும் அறிந்தேன்.
நாகர்கோயில், ஸ்டாலின்
காலநிலை மாறும் நிலை பத்தி சீன அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கை குறித்து ஐ நா தலைமைச் செயலாளர் பன்-கி -மூன் பாராட்டியது, ஐநாவின் எல்லா உறுப்பு நாடுகளும் சீன அரசை பாராட்டியது போல் உள்ளது.


1 2