 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலத்துக்குட்பட்ட நாட்களே உள்ளன. இப்பொருட்காட்சிக்கு தன்னார்வத் தொண்டர்களைச் சேர்க்கும் பணி மே முதல் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இன்று வரை, தன்னார்வத் தொண்டர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்த மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் மிகப் பெரிய பொருளாதார மையமான ஷாங்காய் மாநகரில், அனைவரும் தன்னார்வத் தொண்டராக மாறி ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு பங்காற்ற விரும்புகின்றனர்.

இளம் மாணவர்கள் இப்பொருட்காட்சியின் தன்னார்வத் தொண்டர்களில் முக்கியமாக இடம்பெறுவார்கள். சீனாவின் மே நான்கு இளைஞர் தினத்தில், ஷாங்காய் பதின்பருவத்தினர் வளர்ச்சி நிதியத்தின் பணியாளர்கள் 13 முதல் 35 வரையான வயதிலுள்ள இளைஞர்களிடையில் 3000க்கு அதிகமான வினாத்தாட்களை வினியோகித்தனர். தன்னார்வத் தொண்டர் சேவைப் பணியில் சேர 92 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் விரும்புகின்றனர். ஷாங்காய் 2வது தொழில் துறை பல்கலைக்கழக மாணவர் Ye Xiaochen அவர்களில் ஒருவர் ஆவார்.
1 2
|