
"இந்த உலகப் பொருட்காட்சிக்கு பங்காற்ற விரும்புகின்றேன். எங்கள் பல்கலைக்கழகம் நடத்திய தன்னார்வத் தொண்டர் நடவடிக்கைகளில் பங்கெடுக்கின்றேன். இப்பொருட்காட்சியில் தன்னார்வத் தொண்டராக பலர் விரும்புவதால் தீவிரமான போட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். பல்வேறு துறைகளில் திறமையை அனைவரும் உயர்த்தி வருகின்றனர். நானும் எனது அனுபவங்களை அதிகரித்து வருகின்றேன்" என்று அவர் கூறினார்.
ஷாங்காய் மாநகரின் Pu Xi எனும் இடத்தில் 82 வயதான ஒரு முதியோர் வாழ்கிறார். அவரது பெயர் Yang Cunyi. 1998ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 11 ஆண்டுகளில், ஷாங்காயின் வீதிகளில் நகரக் காட்சி பற்றிய 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிழற்படங்களை இவர் எடுத்துள்ளார். இந்த நிழற்படங்கள் ஷாங்காய் மாநகரின் கட்டுமானத்தில் குறைபாடுகளை வெளிப்படுத்துகின்றன. இந்நகரில் வாழ்ந்து வரும் முதியோர் Yang, முன்னதாகவே தன்னார்வத் தொண்டர் சேவைப் பணியில் உற்சாகத்துடன் பங்கெடுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் நிழற்படக் கருவியைக் கொண்டு வீதிகளில் காணப்படும் குறைபாடுகளைத் தேடி, அவற்றை நிழற்படங்கள் எடுத்து நாகரீக உலகப் பொருட்காட்சி பற்றி மக்களுக்குப் பரப்புரை செய்கிறார்.

வெற்றி பெற்ற ஆண்ணுக்குப் பின் அவருக்கு அமைதியாக ஆதரவளிக்கும் பெண் ஒருவர் இருக்கிறார் என கூறப்படுகிறது. Yang Cunyi அவர்களின் மனைவி Zhao Zuoping கணவரது தன்னார்வத் தொண்டர் பணிக்கு தன்னால் இயன்ற அளவிலான ஆதரவு வழங்கி வருகிறார். Zhao Zuoping பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற Yang Cunyi ஓய்வெடுக்கவில்லை. புகழ் மற்றும் நலனுக்குப் பதிலாக, மற்றவரின் வாழ்க்கை மேலும் அருமையாக இருப்பதற்கு தன்னார்வத் தொண்டர் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
முதியோரின் மன உறுதி மற்றும் இளைஞரின் உற்சாகம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு துணைபுரியும் என நம்புகின்றோம். 1 2
|