• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 15:33:33    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகான பெய்ஜிங் வாழ்க்கை

cri
இவ்வாண்டின் ஆகஸ்ட் 8ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற முதல் ஆண்டு நிறைவாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவுக்கு அரிய ஒலிம்பிக் மரபுச் செல்வத்தை வழங்கியது மட்டுமின்றி. பெய்ஜிங் நகரவாசிகளின் வாழ்க்கை வழிமுறை மற்றும் கருத்தியலில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் பெய்ஜிங்கில் வேறுபட்ட வாழ்க்கை பற்றிக் கூறுகிறோம்.

Zhao Ziao, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள் விடியற்காலையில் பிறந்தார். அன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க நாளாகும். அன்று பிறந்த குழந்தைகள், சீனாவில் ஒலிம்பிக் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர்.
சீன மொழியில், Ao என்றால், பெருமை அல்லது ஒலிம்பிக். அதனால், நாங்கள், Ao என்ற எழுத்தை, எங்கள் மகளின் பெயராக வைத்தோம். இதனைப் பயன்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நினைவு கூறுகின்றோம் என்று Zhao Ziaoவின் தாய் Li Yan கூறினார்.
பிறந்த நாளை வைத்து, Ziaoவுக்கு ஒலிம்பிக் என்ற கருத்தை வழங்குவது மட்டுமல்ல. குழந்தைப்பருவத்திலேயே, விளையாட்டின் ஈர்ப்பு ஆற்றலையும், விளையாட்டின் முக்கியத்துவத்தையும் தமது மகளுக்கு, உணர்த்த விரும்புவதாக Li Yan கூறினார். Li Yanஇன் கூற்று, பல பெய்ஜிங் நகரவாசிகளின்

கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பின், விளையாட்டில் கலந்து கொள்ளும் பெய்ஜிங் நகரவாசிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் திறப்பு, பெய்ஜிங் நகரவாசிகளுக்கு மேலதிக விளையாட்டு மேற்கொள்ளும் இடங்களை வழங்கியுள்ளது. 72 வயதான Zhang Chonglu, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நீச்சல் அரங்கான நீர் கன சதுரத்திற்கு அருகில் வாழ்கின்றார். இவ்வாண்டின் ஜூன் திங்கள், நீர் கன சதுரம், பொது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. Zhang Chonglu, உடனடியாக அவரது பேரனை உடன் கூட்டிச் சென்று, ஒலிம்பிக் அரங்குகளின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொண்டார்.

நான், எனது பேரனைக் கூட்டிச் சென்று, ஒலிம்பிக் அரங்குகளின் கட்டிடங்களையும், வசதிகளையும் கண்டு அனுபவித்தேன். இங்கு, எமது ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் சிறந்த சாதனைகளைப் பெற்றனர். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து, இந்த இடத்தை கண்டு ரசிக்க விரும்புகின்றனர் என்று Zhang Chonglu கூறினார்.
1 2