• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 15:33:33    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகான பெய்ஜிங் வாழ்க்கை

cri

Zhang Chongluவின் 13 வயதான பேரன் Zhang Mingyang, தாத்தாவின் கருத்துக்கு உடன்பாடு தெரிவித்தார். ஒலிம்பிக் அரங்குகளின் திறப்பு, விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் நகரவாசிகளின் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று Zhang Mingyang கருத்து தெரிவித்தார்.
அனைவரும் கூட்டாக உடல் பயிற்சி மேற்கொள்வது நல்லது. இவை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளாகும். இங்குள்ள வசதிகள் சிறந்ததாக இருப்பது உறுதி. நான் இங்கு வந்து, இவற்றை அனுபவிக்கின்றேன் என்று Zhang Mingyang கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப்பணிகளில், ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளின் கட்டுமானத்தைத் தவிர, நகர அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை மேம்படுத்துவதிலும், பெய்ஜிங், மாநகராட்சி அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்தது. நகரில் குறுக்கும் நெடுக்குமாய் செல்லக் கூடிய விரைவுப் போக்குவரத்து இணையத்தைக் கட்டியமைத்துள்ளது. இதன் விளைவாக, போக்குவரத்து மேலும் வசதியாக இருப்பது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் பெய்ஜிங் நகரவாசிகளின் நேரடியாக உணர்ந்து பாராட்டக் கூடிய முக்கிய ஒரு அனுபவமாகும். 28 வயதான, பெய்ஜிங் நகரவாசி Bi Ziyu அம்மையாரின் வீடு, அவர் பணி புரிந்த இடத்திற்கு அதிகத் தலைவில் இருக்கிறது. அவற்றுக்கிடையில் தரைக்கடி இருப்புப்பாதை, போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும் முன், நாள்தோறும் அவர் அலுவலகத்திற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. வசதியாக இருக்கவில்லை. ஆனால், தற்போது, புதிய தரைக்கடி இருப்புப்பாதை, அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்றடைய பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறும் வகையில், பல தரைக்கடி இருப்புப்பாதையின் புதிய நெறிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது நான் அலுவலகத்திற்குச் செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது. பல்வேறு இடங்களுக்குச் செல்வதும் வசதியாக மாறியுள்ளது என்று Bi Ziyu கூறினார்.
2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்ஜிங்கில் சீருந்துகளின் சாலை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் தற்காலிக நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. இது, சீருந்து வைத்துள்ளோருக்கு சில பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெய்ஜிங்கில் காற்றுத் தரத்தையும், போக்குவரத்து நிலைமையையும் பெரிதும் மேம்படுத்தியது. அதனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், இத்தகைய நடவடிக்கை, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தோடு, அது, பெரும்பாலான நகரவாசிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. Bi Ziyu கூறியதாவது,

தற்போது, சீருந்துகளை வைத்துள்ள பெய்ஜிங் நகரவாசிகளின் எண்ணிக்கை, மிக அதிகமாக இருக்கிறது. சீருந்துப் பயணக் கட்டுப்பாட்டு நடவடிக்கையைச் செயல்படுத்துவது, போக்குவரத்து நிர்ப்பந்தத்தை ஒப்பீட்டளவில் தணிவு செய்துள்ளது. தவிர, அது, காற்றுத் தரத்தின் மேம்பாட்டிற்கு, துணை புரிந்துள்ளது என்று Bi Ziyu கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் நகரவாசிகளுக்கு வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல. அவர்களது கருத்தையும் வாழ்க்கை வழிமுறையையும் மாற்றியுள்ளது. உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொண்டர் சேவை முதலியவற்றுக்கு, இன்றைய வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற ஓராண்டுக்குப் பின், பெய்ஜிங் நகரவாசிகளின் வாழ்க்கை மேலும் இன்பமாக மாறியுள்ளது.

1 2