• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-18 16:52:48    
சொர்க்கக் கோயிலின் சிறப்பம்சங்கள் அ

cri

சொர்க்கக் கோயிலின் சிறப்பம்சங்கள்

கன்னியாகுமரியில் காந்தியடிகளின் நினைவகம் உள்ளது நாம் அறிவோம். அங்கு ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளன்று கூரையிலிருந்து சூரிய ஒளி நேரே நினைவகத்தின் உள்ளே இருக்கும் சிலையின் மீது விழுமாம். ஒரே ஒரு நாள் மட்டும் அப்படி விழும் வகையில் கட்டியமைத்துள்ளது வியப்பாகத்தான் உள்ளது. இதை காண அந்த நாளில் கூட்டம் அலைமோதுமாம். இப்படி உலகிலுள்ள பல புகழ்பெற்ற கட்டிடங்கள் தங்களுக்கென சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. தியெனான்மென் சதுக்கம் நவசீனாவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக விளங்குவது போல், பண்டைய சீனாவின் நினைவூட்டலாக அமைந்த சொர்க்கக் கோயில், கோடைக்கால மாளிகை, மணி மற்றும் முரசு கோபுரங்கள், தடை செய்யப்பட்ட அல்லது விலக்கப்பட்ட நகரம் ஆகியவை பெய்ஜிங்கின் கட்டிடங்களுக்கு தனி அழகு சேர்க்கின்றன. இந்த நான்கு கட்டிடங்கள் அல்லது காட்சியிடங்கள் பெய்ஜிங்கில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியவையாகும். அந்த வகையில் கடந்த முறை Zi jin Cheng என்று சீன மொழியிலும் Forbidden City என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் புறக்கணிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட நகரத்தை பற்றி அறியத் தந்தோம். 23 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனையில் மொத்தம் 9999 ½ அறைகள் உண்டு. 9999 ½ அறைகள் என்பதன் பின்னணி பற்றி அறிகையில் வானுலகின் அரண்மனைக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் முகமாக இங்கே மண்ணுலகில் கட்டப்பட்ட அரண்மனையில் 10 ஆயிரத்துக்கு குறைவாக 9999 ½ அறைகள் கட்டினார்கள் என்று அறிந்தோம்.

இன்றைய நிகழ்ச்சியில் சொர்க்கக் கோயிலை பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக

1 2