• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-21 14:38:58    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் சீன விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை

cri

இன்றைய நிகழ்ச்சியில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் சீன விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை பற்றி கூறுகிறோம்.

ஓராண்டுக்கு முன், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சீன பிரதிநிதிக் குழு, இப்போட்டியில் 51 தங்க பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றது. இது, சீன விளையாட்டு இலட்சியம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். ஓராண்டுக்கு பின், சீன விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் அவர்களை பற்றி மீண்டும் அறிகிறோம்.

ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின்பும், பல வீரர்கள் இத்துறையிலிருந்து விலகி ஓய்வு பெறுகின்றனர். சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்ட பின், விளையாட்டு வாழ்க்கையை இனிதே முடித்து கொள்ள முடியும் என்று பல சீன விளையாட்டு வீரர்கள்கள் கருதுகின்றனர். அவர்கள் வேறுபட்ட வாழ்க்கையை கழிக்கத் துவங்கினர். சீன ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் yangwei அவர்களில் ஒருவராவார்.

2006, 2007 ஆகிய ஆண்டுகளின் உலகச் சாம்பியன் போட்டியில், அவர் ஆடவர் அனைத்து வகை சீருடற்பயிற்சி போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். 2008ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவரது தலைமையில், சீன ஆடவர் சீருடற்பயிற்சிக் குழு தங்கப் பதக்கம் பெற்றது. அவரும் ஆடவர் அனைத்து வகை சீருடற்பயிற்சி போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். அவர், சீனாவின் மிகவும் பளபளப்பான நட்சத்திரமாக மாறினார்.

இவ்வாண்டின் மே திங்களுக்கு முன், 29 வயதான yangwei, தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்து கொண்டார். அதற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது,

நான் வீட்டில் கருத்தரித்துள்ள எனது மனைவியை கவனித்து வருகிறேன். அவரது உணவு, தங்குமிட வசதி முதலியவை கவனிக்கப்பட வேண்டும். எங்களது குழந்தை, சுகாதாரமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகறேன் என்று அவர் கூறினார்.

சாதாரண மக்கள் போல் அமைதியான வாழ்க்கையை கழிப்பது அவரது விருப்பமாகும் என்று yangwei தெரிவித்தார்.

சீன விளையாட்டு இலட்சியத்திற்கு பங்காற்றிய சிலர், பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு பின் தங்களது வாழ்க்கையை மாற்றினர்.

2004ம் ஆண்டின் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன மகளிர் வாலிபால் குழுவின் பயிற்சியாளர் chen zhongheவின் தலைமையில், இக்குழு 20 ஆண்டுகால மந்தமான நிலையை அகற்றி தங்கப் பதக்கம் பெற்றது. ஆனால், பெய்ஜிங் ஒலிம்பிக்கில், இக்குழு, வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது. சீன ரசிகர்களின் ஏமாற்றத்தில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். அவர் பதவியிலிருந்து விலகிய பின், சீன ஃபூச்சியென் மாநிலத்தின் விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக பதவியேற்றார். புதிய வாழ்க்கைக்கு ஏற்ப அவர் பாடுபடுகிறார்.

1 2