• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-21 14:38:58    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் சீன விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை

cri

விளையாட்டு ஆணையத்தில் பல பணிகளை கையாள வேண்டும். பணிகள் அனைத்தையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு காலம் தேவைப்படும். ஆனால், முன்பை விட, தற்போதைய வாழ்க்கை, சொகுசானதாகவும் எளிதானதாகவும் மாறியது. குடும்பத்தினரோடு வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அவர்களுடன் வேறுபட்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாதனை பெற்ற சில நட்சத்திரங்கள், தற்போது தொடர்ந்து மிளிர்கின்றனர்.

Guojingjing என்ற பெயர், சீன மற்றும் உலக நீர் குதிப்பு வரலாற்றில் பதிவான ஒன்றாகும். 2001ம் முதல் 2007ம் ஆண்டு வரை, அவர் உலக நீச்சல் சாம்பியன் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை பெற்றார். 4 முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அவர், 4 தங்க பதக்கங்களை வென்றார். அண்மையில் முடிவடைந்த 2009ம் ஆண்டின் உலக நீச்சல் சாம்பியன் போட்டியின் மகளிர் 3 மீட்டர் பலகை நீர் குதிப்பில், அவர் மீண்டும் முதலிடம் பெற்றார். 27வயதான guojingjing கூறியதாவது,

தற்போது சீனாவின் பல இளைய விளையாட்டு வீரர்கள் சிறந்த திறமையாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அதிக போட்டி வாய்ப்புகள் வழங்கப்படும். எதிர்காலத்தில அவர்கள், என்னைத் தாண்டும் சாதனைகளை பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டார். அடுத்த உலக சாம்பியன் போட்டியிலும் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொள்ள அவர் விரும்புகிறார்.

Guojingjing போலவே, 20 வயதான chengfei நீண்டகாலமாக விளையாட்டில் ஈடுபட விரும்புகிறார். Chengfei, சீன மகளிர் சீருடற்பயிற்சி அணியில் மிக அதிக உலக சாம்பியன் பட்டங்களைப் பெற்றவராவார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் காயமடைந்த அவர், தற்போது சிறந்த நிலையில் இல்லை. ஆனால், சீன நாட்டின் விளையாட்டுப்போட்டியிலும் உலகச் சாம்பியன் போட்டியிலும் கலந்து கொள்ள அவர் தொடர்ந்து பாடுபடுகிறார். பொய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அவருக்கு அதிக மாற்றங்களை கொண்டு வந்தது என்று அவர் ஏற்றுக் கொண்டார். தெளிந்த, அமைதியான மனநிலையை மீண்டும் பெற அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,

நான், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்தைய மனநிலைக்கு திரும்ப விரும்புகிறேன். அது, அமைதியான, நிர்ப்பந்தமில்லாத நிலை என்று chengfei கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற ஓராண்டு நினைவில், சீனாவின் மேலதிக விளையாட்டு வீரர்கள் சாதனை பெற்ற பின் சீரான எதிர்காலத்தை எதிர்பார்க்கினறனர்.

கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து ஆகிய நாட்டு நிலை குழுக்கள் இளைய குழுவினரை முக்கியமாக கொண்டு மீண்டும் உருவாக்கப்பட்டன. 2009ம் ஆண்டின் உலக நீச்சல் சாம்பியன் போட்டியில், சீனாவின் zhanglin, கடந்த 49 ஆண்டுகால வரலாற்றில் சீனாவின் முதல் நீச்சல் சாம்பியன் பட்டம் பெற்று உலக சாதனையைத் தாண்டினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்குப் பின், சீன விளையாட்டு வீரர்களின் திறமையும் மனநிலையும் மேலும் வலுவாகியுள்ளன. அதற்கு பிந்தைய காலத்தில், விளையாட்டு வீரர்கள் எவ்வகை வாழ்க்கையை எதிர்நோக்கிய போதிலும், இப்போட்டி அவர்களின் மனதில் மறக்கப்பட முடியாத நினைவை ஏற்படுத்தியது. அனைத்து சீன மக்களையும் பொருத்தவரை, அது மறக்கப்பட முடியாத நினைவாகும் என்று கூறலாம்.


1 2