• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Friday    Apr 4th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 17:11:57    
புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை

cri

ஏப்ரல் திங்களின் கடைசி வாரம், சீனாவின் 15வது புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பரப்புரை வாரமாகும். புற்றுநோய் சிகிச்சை முறைமையை ஒருங்கிணைத்து, வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது இவ்வாண்டு நடவடிக்கையின் தலைப்பாகும். தற்போது, முழு உலகிலும் நாள்தோறும் சுமார் 55 இலட்சம் மக்கள் புற்றுநோய்கள் ஏற்படும் வலியால் அல்லல்படுகின்றனர். குறிப்பாக, இறுதி கட்டத்திலான புற்றுநோயால் ஏற்பட்டவர்களில் 70 விழுக்காடு முதல் 90 விழுக்காட்டினர் தீராத வலியால் அல்லல்படுகின்றனர். புற்றுநோயின் வலியைக் குறைப்பது உலகளவிலான பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.

நமது வாழ்க்கையில், புற்றுநோய் ஒரு வகை கடுமையான நோய் ஆகும். மனிதரின் உயிருக்கு இது மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மேலும், இது நோயாளிகளுக்கு கடும் வலியை ஏற்படுத்துகின்றது. நோய் வாய்ப்பட்ட காலத்துக்கேற்ப இந்த வலி படிப்படியாக அதிகரித்து கடுமையாகிகின்றது. புற்றுநோய் உள்ளவர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் வேறுபட்ட அளவிலான வலியை உணர்கின்றனர் என்று பெய்ஜிங் புற்றுநோய் மருத்துவமனையின் நியே ஜுன் கூறினார். தொடச்சியாக நிலவி வரும் கடும் வலி, நோயாளிகளுக்கிடையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தற்கொலை செய்ய விரும்பிய புற்றுநோயாளிகளில் 80 விழுக்காட்டினர், கடும் வலியால் அல்லல்பட்டவர்கள் தான். அவர் கூறியதாவது

சாதாராண அமைதியான மனப்பாங்குடன் புற்றுநோயை ஏன் மரணத்தையும் கூட எதிர்நோக்கலாம். ஆனால், புற்றுநோயால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாது. என்று சில நோயாளிகள் கூறினர். ஆகையால், நோய் வலியைச் சமாளிக்கும் நிலைமை, நோயாளிகளின் வாழ்க்கை தரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு வலி பொதுவான ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. வலிக்கான சிகிச்சை, புற்றுநோயின் சிகிச்சையை போல முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மருத்துவத் துறையின் பொது கருத்தாகும் என்று மருத்துவர் நியே ஜுன் கூறினார். வலியை உரிய முறையில் குறைத்தால், நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, புற்றுநோய் சிகிச்சையின் பயனையும் உயர்த்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

புற்றுநோயின் வலியை எப்படி அறிந்து கொண்டு கையாள வேண்டும்? வலியை ஏற்படுத்தும் 3 காரணங்களைப் பார்ப்போம். 1. புற்றுநோயால் ஏற்பட்ட வலி. 2. மருத்துவ சிகிச்சையால் ஏற்பட்ட வலி, வேதியியல் சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, venipuncture எனும் நரம்பு வழி சிகிச்சைமுதலியவை பல்வகை புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளில் இடம்பெறுகின்றன. 3. இடுப்பு வலி, முடக்கு வாதம் போன்ற புற்றுநோய்களுடன் உணரப்பட்ட தீரா வலி வகைகள்.

உலக சுகாதார அமைப்பின் 3 கட்ட வலி தடுப்பு கோட்பாட்டைப் பல்வேறு நாடுகள் கடைபிடிக்கின்றன என்று சீன மக்கள் விடுதலை படையின் 307 இலக்க மருத்துவமனையச் சேர்ந்த யீ சூ பெய் அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது,

உலக சுகாதார அமைப்பு, தொடர்புடைய நிபுணர்களை அழைத்து புற்றுநோய் வலி சிகிச்சை பற்றி விவாதித்தது. 1982ம் ஆண்டு இவ்வமைப்பு 3 கட்ட வலி தடுப்பு திட்டத்தை வெளியிட்டது. 2002ம் ஆண்டு வலி பற்றிய 10வது சர்வதேச மாநாட்டில், இது பற்றிய பொது கருத்து ஏற்பட்டது. அதாவது, வலியையும், ரத்த அழுத்தம், உடல் வெப்பம், சுவாசம், நாடித்துடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து உடலின் 5 பெரிய அறிகுறிகளாக வகைப்படுத்தினர் என்று அவர் கூறினார்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040