• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 17:11:57    
புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை

cri

புற்றுநோயின் நிலைமை, காரணம் ஆகியவற்றை மருத்துவர்கள் சரியாக மதிப்படுகின்றனர். பிறகு, வலியின் நிலைமைக்கேற்ப அதை 3 தரமாக உறுதிப்படுத்துகின்றனர். இறுதியில், வலியின் வேறுபட்ட தரத்துக்கு வேறுபட்ட மருந்துகளை வழங்குகின்றனர். இது தான், 3 கட்ட வலி தடுப்பு திட்டமாகும்.

பெய்ஜிங் புற்றுநோய் மருத்துவமனையின் முனைவர் நியே ஜுன் கூறியதாவது

ஊக்க மருந்தில்லா மருந்து வகைகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். புற்றுநோயால் முதன்முதலாக வலி ஏற்பட்ட போது, இத்தகைய மருந்தை உட்கொள்ளலாம். Aspirin இத்தகைய மருந்துகளில் இடம்பெறுகின்றது. ஆனால், பயன்பாட்டு காலம் நீடித்திருப்பதுடன், இத்தகைய மருந்துகளின் பக்க விளைவும் ஏற்படும். இரத்த தொகுதி, வயிற்றுத் தொகுதி, கல்லீரல் தொகுதி முதலியவை பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நடு நிலை அல்லது கடும் நிலை வலி வரும் போது, மார்பிஃ, dolantin, codein போன்ற மயக்க வகை மருந்துகளை உட்கொள்ளலாம். இது பற்றி நியே ஜுன் மேலும் கூறியதாவது

நீண்டகாலமாக மயக்க வகை மருந்துகளை உட்கொண்டால் பழக்கமாகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த விகிதம் மிகக் குறைவு தான். சுமார் பத்தாயிரம் பேரில் 4 பேருக்கு மட்டும் இது பழக்கமாக மாறிவிடும் என்றார் அவர்.

உலகச் சுகாதார அமைப்பின் 3 கட்ட வலித்தடுப்பு திட்டத்தை சீனா பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டம் மூலம் பல நோயாளிகள் பயன் பெற்று வலி குறைந்ததுடன் வாழ்ககை தரத்தை மேம்படுத்தியுள்ளனர். அதேவேளையில், சீனப் பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறை மூலம் புற்றுநோய் வலியைக் குறைக்க சீன மருத்துவத் துறை பாடுபட்டு வருகின்றது. சீன புற்றுநோய் தடுப்பு சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் லியு சுயே ச்சி கூறியதாவது,

சீன மூலிகை மருந்துகள் மூலம் வலியை முற்றிலும் அகற்றுவது கடினம். ஆனால், மேலை நாட்டு மருந்துகளின் பக்கவிளைவை நீக்குவதற்கு அவை துணை புரியும். எடுத்துக்காட்டாக, மயக்க வகை மருந்துகள் மனித உடம்பில் மலச்சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும். சீன மூலிகை மருந்து மூலம் இந்த பக்கவிளைவை நீக்கலாம் என்று அவர் கூறினார்.

தவிர, அக்குபங்ச்சர் சிகிச்சை மூலம் வலியை குறைக்க தொடர்புடைய சீன நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்று லியு சுயே ச்சி தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட பெரும் அளவிலான ஆய்வு முடிவின் படி, ஏற்கனவேயுள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம், நடு நிலை மற்றும் கடுமையான வலியை உணரும் புற்றுநோயாளிகளிஸ் 90 விழுக்காட்டுக்கு அதிகமானோர் மனநிறைவு தரும் வலி குறைப்பை பெற முடியும். புற்றுநோய் ஏற்பட்டோருக்கான வலி மீதான அறிவையும் கவனத்தையும் அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. வலியை உணராத புற்றுநோயாளிகள் என்ற இலக்கு கூடிய விரைவில் நனவாக நாங்களும் விரும்புகின்றோம்.


1 2