• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 16:31:03    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். கடிதங்களும், மின்னஞ்சல்களும், ஒலிப்பதிவுமாக எம்மை வந்தடைந்த உங்களது கருத்துக்களை தொகுத்து இன்றைய நிகழ்ச்சியிலும் வழங்குகிறோம்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் கடிதம், மின்னஞ்சல் வாயிலாக கருத்துக்களை அனுப்பி வரும் அன்புள்ளங்களுக்கு எமது நன்றிகள்.
கலை: கடிதங்களை அனுப்பாவிட்டாலும் எமது நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கேட்கும் நேயர்களுக்கும் நன்றிகள். ஆனால் உங்களது கருத்துக்களையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். நேரம் கிடைக்கும்போது சில வரிகளில் உங்கள் எண்ணங்களை பதிவு செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
க்ளீட்டஸ்: சரி, நிகழ்ச்சியின் முதலில், ஒலிப்பதிவின் வழியே தமது கருத்துக்களை அனுப்பிய நேயர்களின் பகிர்வை கேட்கலாம்.
கடிதப்பகுதி:
கலை: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், தார்வழி டி. கே. பொன்னுசாமி எழுதியது. இன்றைய திபெத் எனும் நிகழ்ச்சியை நமது ஒலிபரப்பில் கேட்டு வருகிறேன். அண்மையில் அறிவிப்பாளர் ஜெயா வழங்கிய கட்டுரையில் திபெத்தின் முந்தைய அடிமை மக்களை பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. 1959ம் ஆண்டுக்கு பிறகே இந்த அடிமை மக்கள் விடுதலை பெற்று, உரிமையுடன் வாழத்தொடங்கினர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
க்ளீட்டஸ்: நேயர் விருப்பம் நிகழ்ச்சி குறித்து ஆந்திர மாநிலம் அஸ்வபுரம் நேயர் மும்பை சுகுமார் அனுப்பிய கடிதம். சில நாட்களுக்கு முன் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் மனதைக் கவரும் பழைய திரைப் பாடல்கள் இடம்பெற்றன. இது போன்ற பாடல்கள் வரவேற்கப்படவேண்டும். காரணம், புதிய பாடல்கள் பல பொருள் புரியாத வகையைச் சேர்ந்தவை. உள்ளூர் தொலைக்காட்சி, வானொலிகளில் அவற்றின் தாக்கமே அதிகம். பழைய, பொருள் செறிந்த பாடல்கள் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இடம்பெறட்டும்.


கலை: இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய செய்தித்தொகுப்பை கேட்டேன். பொருட்காட்சிக்கான ஆயத்தப்பணி, தொண்டர்கள் சேவை உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றன. நாட்கள் குறைந்து கொண்டே வர, பொருட்காட்சி துவங்கும் போக்கில் நடைபெறும் பணிகள் மற்றும் 20 நாடுகள் முன்கண்டிராத அளவில் பங்கேற்க உள்ளமை என பல தகவல்களை அறிவிப்பாளர் கலைமகள் தெளிவாக தொகுத்தளித்தார். நன்றி.
க்ளீட்டஸ்: அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி மதுரை-20 என். ராமசாமி எழுதிய கடிதம். தலைக்கு மேல் கத்தி என்ற தலைப்பில் விண்வெளிக் கழிவுகள் தொடர்பான தகவல்கள் தொகுத்தளிக்கப்பட்டன. இந்த பிரச்சனை தொடர்பாக உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. நல்ல தகவல்களை தந்த சீன வானொலியை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
கலை: குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம்: நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சிறப்புப்பரிசு பெற்று சீனாவுக்கு வந்த முனுகப்பட்டு கண்ணன் சேகரோடு தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசி அவர்கள் உரையாடியதை கேட்டென். சீனாவில் தான் பார்த்த, ரசித்த பலவற்றை தன்னுடைய அனுபவ பகிர்வாக கண்ணன் சேகர் குறிபிட்டார். சீன உணவு, சீன வானொலி தமிழ்ப்பிரிவின பணியாளர்கள் மற்றும் சீன மக்கள் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்கின்றனர் என்பதை அவர் அழகாக விளக்கினார். அவருக்கு பாராட்டுக்கள்.


க்ளீட்டஸ்: இலங்கை ஹெம்மத்தகமவை சேர்ந்த ரிஸ்வானா உபேய்த் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். செய்திகளின் மூலம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விரைவில் நடைபெறவுள்ளது பற்றிய தகவல்களை கேட்டேன். அதில் இலங்கை உட்பட பல நாடுகள் கலந்துகொள்ளும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். செவ்வாய் கிழமை நேருக்கு நேர், ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பம் நிகழ்ச்சிகள் எனக்கு பிடித்தமானவை.
கலை: மக்கள் சீனம் நிகழ்ச்சி குறித்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். மக்கள் சீனம் நிகழ்ச்சியில் பெய்ஜிங்கிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த வடசீனாவிலான உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரதேசம் பற்றி கூறக் கேட்டேன். கனிம மூலவளங்கள் மிகுந்த சாங்தோ நகரை சுற்றுப்புறச் சீர்கேட்டு பிரச்சனையிலிருந்து சீன அரசு எவ்வாறு பாதுகாத்து வருகின்றது என்பதை தெளிவாக அறிந்துகொண்டேன். தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஈஸ்வரிக்கு நன்றி.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை வி. துரைராஜா எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திபெத் பற்றிய அருமையான தகவல்கள் இடம்பெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உலகில் கடல்மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்த பீட பூமியாகும். நிலவியல், புவியியல் அமைவுகள், காலநிலை என பல சவால்கள் கொண்ட இப்பிரதேசம் பற்றிய அறிந்துகொள்ள நிகழ்ச்சி உதவியது. தமிழ்ப்பிரிவுக்கு நன்றி.


மின்னஞ்சல் பகுதி:
மீனாட்சிபாளையம், கா. அருண்
ஆகஸ்ட்10 நாள் இடம்பெற்ற நட்புப்பாலம் நிகழ்ச்சியில் செல்வம் அவர்கள் தனது திபெத் பயணத்தின்போது தன்னை உபசரித்தவர்களின் மனம் நோகாமல் தான் நடந்து கொண்டதையும், தனது முழு ஆற்றலையும் கொண்டு திபெத் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்ததையும் சிறப்பாக பகிர்ந்து கொண்டார். ஆகஸ்ட்11 நாள் இடம்பெற்ற நவ சீனாவின் வைரவிழா சிறப்பு நிகழ்ச்சியில் "மக்களின் நலனுக்காக" என்ற சீன வானொலியின் விமர்சனக் கட்டுரையை வழங்கினீர்கள். சீன அரசு இதுவரை மக்களுக்காக செய்த பணிகளை மீளாய்வு செய்வதாக இருந்தது. நன்றி.
சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன்
ஆகஸ்ட் 9ம் நாள் மலர்சோலை நிகழ்ச்சியில் 81 உறுப்பினர்களை கொண்ட அதிசய குடும்பம் பற்றிய தகவல் கேட்டு வியப்புற்றேன். இன்றைய அவசர உலகத்தில் அவரவர் வாழ்க்கைப் பாதையில் தாங்கள் மட்டும் பயணித்தால் போதும் என்று எண்ணுவோர் நடுவே இன்னும் கூட்டுக் குடும்ப வாழ்வே சிறந்தது என்று வாழும் புண்ணியவான்கள் இருப்பதால் தான் உலகில் ஆங்காங்கே மழை பெய்கின்றது...

1 2