• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-25 16:31:03    
நேயர்களின் கருத்துக்கள்

cri


வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
ஆகஸ்டு திங்கள் 13 ஆம் நாள் இடம்பெற்ற இரண்டாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •சீன வெளியுறவுக் கொள்கைகள் பற்றி செற்பொழிவு• என்ற கட்டுரையைக் கேட்டேன்.
சுவிஸ்லர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியே சு சுமார் 20 நிமிட நேரம் நிகழ்த்திய முக்கிய உரையின் சாராம்சத்தினை இன்றைய கட்டுரையின் மூலமாக அறிந்து கொண்டேன். இந்த 20 நிமிட உரையை ஆங்கில மொழியில் வழங்கிய சீன வெளியுறவு அமைச்சருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். English is a language, not knowledge ஆங்கில ஒரு மொழி, அது அறிவல்ல என நம்புபவன் நான். ஆனாலும், என்ன காரணத்தினாலோ ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உலகெங்கும் மேலோங்கி வருகிறது. பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளில் ஆங்கில மொழி சாதாரணமாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும், பிரிட்டனின் ஆளுகைக்குட்படாத சீனாவில் ஆங்கில மொழிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஒரு காலத்தில், சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என கூறப்பட்டது உண்டு. ஆனாலும், தற்போது சீனர்கள் மிகத் தெளிவாக சீன மொழியைப் பேசுகின்றனர். என்னுடைய சீனப் பயணத்தின்போது, திபெத்திற்கு பயணம் செய்த குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு சீனரும் தெளிவான முறையில் ஆங்கில மொழியில் பேசினர். இது வளர்ச்சியின் மற்றுமொரு அடையாளமாகும். அவ்வகையில், ஜெனீவா நகரில், உலக சமூகத்தினரிடையே ஆங்கில மொழியில் பேசிய சீன வெளியுறவு அமைச்சருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அமெரிக்கா, ஆல்பர்ட் பெர்ணான்டோ
எஞ்சிய சோற்றைக் கொண்டு தயாரித்த உணவு வகை, (சோறு guo ba தயாரிப்பு ) குறித்து சீன உணவரங்கம் பகுதியில் கேட்டேன். இது ஒரு புது வ‌கையான‌ நாவூறும் உண‌வு வ‌கை. அறிமுக‌ப்ப‌டுத்திய‌ தோழி வாணிக்கு என்னினிய‌ பாராட்டும் வாழ்த்தும்! இந்தியாவில் எஞ்சிய சோற்றை இதுபோன்ற‌ தோசைபோல் வார்த்துச் சாப்பிட்டு நான் பார்த்த‌துமில்லை; கேட்ட‌துமில்லை. ஆனால் ஏற‌க்குறைய‌ முட்டை இல்லாம‌ல் ப‌ழைய‌ சாத‌த்தை வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வ‌த‌க்கி உப்புமாபோல‌ சூடாக‌ச் சாப்பிடும் வ‌ழ‌க்க‌ம் உண்டு. ப‌ழைய‌ சாத‌த்தை ம‌ட்டும‌ல்ல‌ ப‌ழைய‌ குழ‌ம்புவ‌கைக‌ளை ஒன்றாக‌ ஊற்றி சுட‌வைத்து இல்லை..இல்லை ந‌ன்றாக‌ சுண்ட‌வைத்து சாப்பிடும் "க‌றிய‌முது" இருக்கிற‌தே கூடுத‌லாக‌ ரெண்டு க‌வ‌ள‌ம் சோறு உள்ளே போகும் என்பது தனிக் கதை.

......சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி......
மக்களின் நலனுக்காக என்ற நவ சீனாவின் வைர வழா சிறப்பு நிகழ்ச்சியினைக் கேட்டேன். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் சீனா அரசின் பல துறை சாதனைகளை அனைத்து நேயர்களும் அறிந்து கொள்ள வழிவகை செய்திடும்"அறிவு தகவல் களஞ்சியமாக" இந்த சிறப்பு நிகழ்ச்சி தமிழ் நேயர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். மேலும் மக்களின் நலனுக்காக பாடுபடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினைப் பற்றியும், சீன நடுவண் அரசின் அமைப்பு முறைபற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் துணைபுரியும். என்னை நவசீனாவின் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச்சென்ற தமிழ்ப்பிரிவுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
......புதுக்கோட்டை ஜி வரதராஜன்......
ஆகஸ்ட் 13ம் நாள் மோகன் அவர்கள் செய்தித்தொகுப்பில் மத சுதந்திர பாதுகாப்பு நம்பிக்கை பற்றிக் கூறக்கேட்டேன். பல்வேறு தேசிய இனங்கள் கூடி வாழும் சீன நாட்டில் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சிபுரிந்தாலும் மக்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாமல் மதிப்பும்,மரியாதையும் வழங்கி வருவதோடு அவர்கள்
மத வழிபாட்டிற்கு வேண்டிய உதவிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களில் அரசு தலையிடா கொள்கையை கடைபிடிப்பது மற்ற நாடுகளுக்கு சிறந்த உதாரணம்.

...வளவனூர் முத்துசிவக்குமரன்..
ஆகஸ்ட் 13ம் நாள் அன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ஊடல் என்போது உப்பை போல் இருக்க வேண்டும் என்று கூறியது மிகவும் சரியானதாகும். எதற்கெடுத்தாலும் "டென்ஷனாக" இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்ளும் சிலரின் சுபாவத்தை மறைமுகமாய் இடித்துக் காட்டியது நன்று. மருத்துவ ரீதியில் ரத்த அழுத்தத்தை இதற்கு காரணமாக கூறினாலும்,. மனம் பக்குவப்பட்டால் இது போன்ற டென்ஷன் குறைவதற்கு நல்ல பலனாக இருக்கும். உப்பை குறைத்துக் கொண்டு, மனதில் குப்பை சேராமல் பார்த்துக் கொண்டால் டென்ஷனால் நாம் டென்ஷன் ஆக வேண்டியதில்லை.


。。。。。。。முனுகப்பட்டு -பி.கண்ணன்சேகர்。。。。。。
ஆகஸ்ட் 13ம் நாள் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை கேட்டேன். சீனாவின் வடக்குபகுதியில் அமைந்துள்ள புதிய தொழில்துறை நகரம் சுற்றுச்சூழலின் முன்னோடியாக விளங்குவது மகிழ்ச்சியைத் தருகின்றது. இதற்காக ஒருகோடி யுவான் தொகையை ஒதுக்கி சூழல் பராமரிப்பு நலப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவது பாராட்டும் வகையில் இருக்கின்றது. எரியாற்றல் செலவு குறைப்பு, கழிவு மேலாண்மை, உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் புதிய தொழில்துறை நகரம், சுற்றுச்சூழல் மாசு இன்றி பொலிவுடன் விளங்குகின்றது! சுற்றுச்சூழல் நலம் என்பது இன்று நமக்கு மட்டுமல்ல நாளைய நமது சந்ததிக்கும் ஆற்றும் முக்கிய பணிகளாகும்.


1 2