இதைத் தொடர்ந்து, தமது சொந்த ஊரான சான்சியை விட்டு, சீனாவின் கடலோர நகரத்துக்கு சென்று, தனது பணிக்கனவை நனவாக்க Liu Li முடிவு செய்தார். அங்கு, தான் விரும்பிய எதிர்காலத்தை சிறப்பான பொருளாதார அடிப்படை வழங்கும் என்று அவர் நம்பினார். தற்சார்பு வேலை வாய்ப்பை கொண்டு, தனது வாழ்க்கையை முழுமையாக மாற்ற விரும்பினார். எனவே, பெய்சிங், ஷாங்காய் முதலிய மாநகரங்களில் வேலை செய்த சக மாணவர்களின் 9 கல்வி மற்றும் பணி அனுபவங்களை Liu Li கேட்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள கடலோர நகரதுக்கு சென்றார். தலைசிறந்த அறிவுடன், நேர்முகத் தேர்வில் அவர் வெற்றிபெற்று, சாங் தூங்கில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய சிறப்பியல்பை வெளிப்படுத்தி, தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, 10 ஆண்டுகால வளர்ச்சியின் மூலம், உள்ளூர் பங்கு பத்திர தரடு நிறுவனத்தின் உயர் நிலை மேலாளராக மாறினார். தற்சார்பு வேலை வாய்ப்பு தனது அனுபவங்களை செழிப்பாக்கி, தனது கனவை நனவாக்கியது என்று Liu Li தெரிவித்தார்.
தற்போது, உலகப் பொருளாதார வளர்ச்சியை நிதி நெருக்கடி பாதித்து வருகின்றது. சீனாவின் இளைஞர்கள் வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகின்றனர். வேலை வாய்ப்பின் இருப்புக்கும் தேவைக்குமிடையிலான முரண்பாடு மிகவும் கடுமையாகியுள்ளது. எனவே, மேலும் கூடுதலான இளைஞர்கள் தற்சார்புப் புத்தாக்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர். வழமையான பணி வழிமுறையை தேடாமல், ஆர்வத்துடன் தங்களது வேலை வாய்ப்பை சொந்தமாக தொழில் செல்வதன் மூலம் நாடி, வாழ்க்கைக்கான கனவை நனவாக்குகின்றனர். 1983ம் ஆண்டு பிறந்த Li Yuanyuan, பட்டதாரிகள் சேர்ந்து சொந்தமாக உருவாக்கிய தொழில் நிறுவனமான வெய் லாங் சர்வதேச பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். மாதிரி ஐ.நா என்பது, இந்நிறுவனத்தின் பயிற்சிகளில் முக்கிய பகுதியாகும். இப்பயிற்சியில், சீனாவின் நடுநிலை பள்ளி மாணவர்கள், ஐ.நாவை மாதிரியாக கொண்டு, வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த நடுநிலை பள்ளி மாணவர்களுடன், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றை விவாதிக்கின்றனர். அவர்களின் பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வீட்டு வாடகை உள்ளிட்டவற்றில், பல்கலைக்கழகங்கள் உதவிகளை வழங்கியுள்ளன. மிகப் பெரும்பாலான பட்டதாரி மாணவர்கள் போல், தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்ட துவக்கத்தில், பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கிகின்றனர் என்று Li Yuanyuan தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்ட முதல் 2 ஆண்டுகளில், பல சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கினோம். மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில், எங்களது தகுநிலை மற்றும் ஆற்றல் குறித்து பள்ளிகள் சந்தேகம் தெரிவித்தன. அத்துடன், மாணவரின் பெற்றோர்களும் ஐயம் கொண்டனர் என்று அவர் கூறினார். மேலும் அதிகமானோர் மாதிரி ஐ.நா என்ற புதிய பயிற்சியைப் புரிந்துகொள்ளும் வகையில், Li Yuanyuan உள்ளிட்ட இத்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர்கள் பலர், சீனாவின் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று, பரப்புரை செய்கின்றனர். மாணவர்களின் வளர்ச்சிக்கு மாதிரி ஐ.நா முக்கியத்துவம் வாய்ந்தது, மதிப்பு மிக்கது. இந்த யதார்த்த நடவடிக்கைகள் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் மற்றும் சீனாவிலுள்ள பல தூதரகங்களின் உதவிகளையும் ஆதரவுகளையும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, அவர்களின் ஏற்பாடு மூலம், Yale பல்கலைக்கழகம் நடத்திய மாதிரி ஐ.நா அன்னும் நடவடிக்கையில் சீனாவின் நடுநிலை பள்ளி மாணவர்கள் வெற்றிகரமாக கலந்துகொண்டனர்.
1 2
|