• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-31 16:37:52    
வளர்ந்து வருகின்ற சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்

cri

சீன பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன், மூலவளங்களும் சுற்றுச்சூழலும் பெரிய நிர்பந்தத்தை எதிர்நோக்குகின்றன. ஆகையால், மூலவளத்தின் பயன்பாட்டு விகிதத்தை அதிகரித்து, மாசுபொருளின் வெளியேற்றத்தை சீனா கட்டுப்படுத்தியது. குறைவான எரியாற்றலைச் செலவிட்டு குறைவான மாசுப்பாட்டை ஏற்படுத்தும் சேவை தொழிலையும் உயர் தொழில்நுட்ப தொழிலையும் சீன அரசு பெரிதும் வளர்த்து வருகின்றது. இப்பின்னணியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்ப உத்தரவாதமளிக்கின்ற துறை, சீனாவில் பெரிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில், இத்தொழிலின் வளர்ச்சி நிலை பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

சீன குவாங் துங் மாநிலத்தின் bangpu குழுமம், சீனாவில் மூலவளத்தை மறுசுழற்சி செய்கின்ற நடுத்தர ரக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் நிறுவனமாகும். பயன்படுத்தப்பட்ட மின்கலன்களை கையாள்கின்ற அதன் திட்டப்பணி, பல உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திட்டப்பணியின் பொறுப்பாளர் yuhaijun கூறியதாவது,

பயன்படுத்தப்பட்ட மின்கலன்களை திரட்டி பதனீடு செய்து புதிய மின்கலன்களுக்கான மூலப்பொருட்களை தயாரிக்கிறோம். இவை மின்கலத் தொழில்நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு புதிய மின்கலன்களை உருவாக்கப்படுகின்றன. இது, ஒரு மறுசுழற்சியாகும். சீனாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கவல்ல மூலவளம் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம், ஒரு முக்கிய வளர்ச்சித் திசையாகும் என்று அவர் கூறினார்.

Yuhaijun கூறியதை போல், தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில், புதிய பொருளாதார ஊக்குவிப்பு ஆற்றலாக மாறியுள்ளது. 2008ம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை எட்டியது. அவற்றின் உற்பத்தி மதிப்பு, 79 ஆயிரம் கோடி யுவானை தாண்டியது. இது, ஆண்டுதோறும் 15 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இத்தொழில் விரைவாக வளர்கின்ற காரணம் குறித்து, சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவர் liu zhiquan கூறியதாவது,

சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொழில், சுற்றுச்சூழல் இலட்சியத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது. அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணி, மாசுபாட்டு கட்டுப்பாடு முதலிய நாட்டின் நடவடிக்கைகள், இத்தொழிலை முன்னேற்றின. எதிர்காலத்தில், இத்தொழிலுக்கு நிறைவான வளர்ச்சி ஆற்றல் உண்டு. அது, எதிர்கால புதிய பொருளாதார அதிகரிப்புத் துறையாக மாறுவது திண்ணம் என்று அவர் கூறினார்.

சர்வதேச நிதி நெருக்கடி பரவிய பின், சீனா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொழிலிலான ஒதுக்கீட்டை அதிகரித்தது. புள்ளிவிபரங்களின் படி, உள்நாட்டுத் தேவையை விரிவாக்குகின்ற 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள ஒதுக்கீட்டில், 30 ஆயிரம் கோடி யுவான், நேரடியாக சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடைய தொழில்களுக்கென ஒதுக்கப்பட்டது என்று liu zhiquan அறிமுகப்படுத்தினார்.

அரசின் ஒதுக்கீடு தவிர, பங்குச் சந்தை, சமூக நிதி திரட்டல் முதலிய வழிமுறைகள் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொழிலின் சந்தைமயமாக்க அளவு உயர்ந்து வருகிறது.

சீன ச்சியாங் சு மாநிலத்தின் ச்சியங் யின் நகரத்தின் கழிவு நீரை கையாளும் ஆலைத் திட்டம் வகுக்கப்பட்ட 5 ஆண்டுகளாக, அரசு 10 கோடி யுவான் மட்டும் ஒதுக்கீடு செய்தது. ஆனால், 50 கோடிக்கு மேலான சமூக நிதியை ஈர்த்துள்ளது. தற்போது நகரத்தில் 40க்கு மேலான கழிவு நீரைக் கையாளும் ஆலைகள் நிறுவப்பட்டன. ச்சியங் யின் நகரம், இம்மாநிலத்தில் ஒருங்கிணைப்பாக கழிவு நீரை கையாள்கின்ற மாதிரி பிரதேசமாக மாறியது.

1 2