ச்சியாங் யின் நகரத்தின் qingyuan கழிவு நீரைக் கையாளும் ஆலை, அரசின் 30 இலட்சம் யுவான் மானியம் சொந்த நிறுவனத்தின், 30 கோடி யுவான் முதலீடு, சமூகத்திலிருந்து திரட்ட நிதி ஆகியவற்றின் மூலம் மேலும் 4 ஆலைகளை நிறுவியுள்ளது. ஆண்டு வருமானம், 1 கோடியே 50 இலட்சம் யுவானை எட்டியது என்று இத்தொழில் நிறுவனத்தின் மேலாளர் sha jianxin கூறினார்.
2002ம் ஆண்டு முதல், கழிவு நீரைக் கையாளும் ஆற்றல், 20 ஆயிரம் டன்னிலிருந்து 1 இலட்சத்து 15 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில், சீனா, சர்வதேச அமைப்புகள் மற்றும் முதலீ்ட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது. நூற்றுக்கு மேலான உலக புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்கள், சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சந்தையில் நுழைந்துள்ளன.
இத்தொழில் விரைவாக வளர்கின்ற அதே வேளை, பல பிரச்சினைகளும் நிலவுகின்றன. முக்கிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறையால், சுற்றுச்சூழல் மேலாண்மையின் தேவையை நிறைவு செய்ய முடியாதுள்ளது. முதலீட்டு மற்றும் நிதி திரட்டல் வழிகளும் குறைவாகவுள்ளன. இப்பிரச்சினைகளைத் தீர்க்க, சீன அரசு, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. Liu zhiquan மேலும் கூறியதாவது,
ஒன்று, சீன அரசு ஒட்டுமொத்தத் திட்டத்தை வலுப்படுத்தியது. எரியாற்றலை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழிலை மறுமலர்ச்சி செய்கின்ற திட்டம் வகுக்கப்பட்டது. இரண்டு, தொழில்நுட்பத்தின் புத்தாக்கத்தை வலுப்படுத்தி தற்சார்புப் புத்தாக்கத்திற்கு சீன அரசு ஊக்கமளிக்கிறது. இதன் மூலம், இத்தொழிலின் பொது நிலையை உயர்த்துகிறது. மூன்று, பல தரப்பட்ட முதலீட்டு வழிகளை விரிவாக்கி, நிதித் திரட்டலின் முறைமையை உருவாக்கும். இது, நடுத்தர மற்றும் சிறிய ரக தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் விளக்கினார்.
தவிரவும், சீனா ஒதுக்கீடு செய்யும் மொத்தத் தொகையை 1 இலட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானுக்கு அதிகரிக்க பாடுபடும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.5 விழுக்காடு வகிக்கிறது. சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில், மேலும் பெரிய வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்குகிறது என்று இது பொருட்படுகிறது.
நேயர்கள் இதுவரை, வளர்ந்து வருகின்ற சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. 1 2
|