• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-01 10:40:22    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி:
......புதுக்கோட்டை ஜி வரதராஜன்......
ஆகஸ்ட் 13ம் நாள் மோகன் அவர்கள் செய்தித்தொகுப்பில் மத சுதந்திர பாதுகாப்பு நம்பிக்கை பற்றிக் கூறக்கேட்டேன். பல்வேறு தேசிய இனங்கள் கூடி வாழும் சீன நாட்டில் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சிபுரிந்தாலும் மக்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாமல் மதிப்பும்,மரியாதையும் வழங்கி வருவதோடு அவர்கள்
மத வழிபாட்டிற்கு வேண்டிய உதவிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களில் அரசு தலையிடா கொள்கையை கடைபிடிப்பது மற்ற நாடுகளுக்கு சிறந்த உதாரணம்.


...வளவனூர் முத்துசிவக்குமரன்..
ஆகஸ்ட் 13ம் நாள் அன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ஊடல் என்போது உப்பை போல் இருக்க வேண்டும் என்று கூறியது மிகவும் சரியானதாகும். எதற்கெடுத்தாலும் "டென்ஷனாக" இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்ளும் சிலரின் சுபாவத்தை மறைமுகமாய் இடித்துக் காட்டியது நன்று. மருத்துவ ரீதியில் ரத்த அழுத்தத்தை இதற்கு காரணமாக கூறினாலும்,. மனம் பக்குவப்பட்டால் இது போன்ற டென்ஷன் குறைவதற்கு நல்ல பலனாக இருக்கும். உப்பை குறைத்துக் கொண்டு, மனதில் குப்பை சேராமல் பார்த்துக் கொண்டால் டென்ஷனால் நாம் டென்ஷன் ஆக வேண்டியதில்லை.
அமெரிக்கா, ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ
சௌதி அரேபியாவுக்கு வழிபாடு செய்யச் செல்லும் சின்ச்சியாங் மக்கள் குறித்த‌ செய்திய‌றிந்தேன். வ‌ழிபாடு செய்ய‌ச் செல்லும் மூவாயிர‌ம் சீன‌ ம‌க்க‌ளும் ந‌ல‌முட‌ன் சென்று ந‌ல‌முட‌ன் திரும்பி வ‌ர‌ எல்லோருக்கும் பொதுவான‌ இறைவ‌னைப் பிரார்த்திக்கிறேன்.


。。。。。。。முனுகப்பட்டு -பி.கண்ணன்சேகர்。。。。。。
ஆகஸ்ட் 13ம் நாள் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை கேட்டேன். சீனாவின் வடக்குபகுதியில் அமைந்துள்ள புதிய தொழில்துறை நகரம் சுற்றுச்சூழலின் முன்னோடியாக விளங்குவது மகிழ்ச்சியைத் தருகின்றது. இதற்காக ஒருகோடி யுவான் தொகையை ஒதுக்கி சூழல் பராமரிப்பு நலப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவது பாராட்டும் வகையில் இருக்கின்றது. எரியாற்றல் செலவு குறைப்பு, கழிவு மேலாண்மை, உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் புதிய தொழில்துறை நகரம், சுற்றுச்சூழல் மாசு இன்றி பொலிவுடன் விளங்குகின்றது! சுற்றுச்சூழல் நலம் என்பது இன்று நமக்கு மட்டுமல்ல நாளைய நமது சந்ததிக்கும் ஆற்றும் முக்கிய பணிகளாகும்.
விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்


மலர்ச்சோலை நிகழ்ச்சியில் பெய்ஜிங்கில் பறவைக் கூடு அரங்கு எதிரே தாய்ச்சி உடற்பயிற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டதை அறிந்தேன். இக்காலத்தில் மருத்துமனை சென்றால், நம்மை பரிசோதித்து நோய் நீங்க மருத்துவ ஆலோசனையும் மருந்தும் வழங்கும் மருத்துவர் காலை, மாலை உடற்பயிற்சி செய்யுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார். மலர்ச்சோலை செய்தி உடற்பயிற்சியில் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. பாராட்டுக்கள். மேலும் ஆகஸ்டு திங்கள் 9 ஆம் நாள் ஆதிகுடிமக்கள் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறிந்தேன். இப்படி ஒரு நாள் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதை நான் சீன வானொலி மூலமே அறிந்து கொண்டேன். அரிய பயனுள்ள தகவல்களை வழங்கி வரும் சீன வானொலிக்கு நன்றி. பாராட்டுக்கள்.
செந்தலை, என்.எஸ். பாலமுரளி
ஜூலை 31ம் நாளன்று செய்திகளில் சீன தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றி கேட்டேன். கடந்த ஆண்டு நிதிநெருக்கடியினால் பாதிப்பு இருந்தபோதிலும் இவ்வாண்டு முற்பாதியில் பலவகை சீன தொழிற்நிறுவனங்கள் சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தியுள்ளன என்பது பாராட்டுதற்குரியதாகும்.. 97 இலட்சத்து 70 ஆயிரத்துகு மேலான தொழிற்நிறுவனங்கள் உள்ளன. தற்போது அது 2.72% அதிகரித்துள்ளது என மக்கள் நாளேடு வழங்கிய புள்ளிவிபரத்தை அறிந்து, வியந்தேன்.


。。。。。。பகளாயூர் P.A.நாட்சிமுத்து。。。。。。
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 18ம் நாள் வெள்ளை மாளிகையில் எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக்கை சந்தித்துரையாடினார். மத்திய கிழக்கு அமைதிப் போக்கு, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை ஆகிய முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். இவ்விரு தரப்புகளின் உறவு மத்திய கிழக்கு அமைதி முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு ஆற்ற உதவும் என்பது உண்மை.
。。。。மீனாட்சிபாளையம் - கா.அருண். (076869)。。。。。
ஆகஸ்ட் 17ம் நாளன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சியில்
சீனாவில் எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதையும், இந்த பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அறிந்தேன். எரியாற்றலை சிக்கனப்படுத்தும் பொருட்டகள் விலை அதிகமாக இருந்தாலும் அதனால் சிக்கனப்படுத்தப்படும் எரியாற்றலின் மதிப்பு இலாபத்தைத்தரும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளது
சிறப்பு.
。。。。ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்。。。。
ஆகஸ்ட் 18ம் நாள் இடம் பெற்ற செய்திகள் கேட்டேன். அதில் ஐ.நா சுற்றுச் சூழல் திட்ட அலுவலகம் தனது அறிக்கையில் உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் போக்கில், ஷாங்காய் மேற்கொண்டுள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணி, உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவோருக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல் சுமார் 2 கோடி ஷாங்காய் மாநகரவாசிகளுக்கும் பசுமைச் செல்வத்தை வழங்கும் என்று கூறியுள்ளது. காற்றுத் தரம், போக்குவரத்து, எரியாற்றல், பசுமை மயமாக்கம் உள்ளிட்ட 9 துறைகளில் ஷாங்காய் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் இதன் மூலம் அறிந்தேன். பாராட்டுக்கள்.


1 2