• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-07 17:26:46    
சீனாவின் வாகனத் தொழில் துறையின் வளர்ச்சி

cri

இவ்வாண்டு, நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாகும். கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் வாகனத் தொழிற்துறை, வெளிநாடுகளின் முன்னேறிய அனுபவங்களைக் கற்று, புத்தாக்கம் செய்து வளர்ந்து வருகிறது. தற்போதைய இத்தொழிற்துறை, வெகுவாக வளரும் பாதையில் நடைபோடுகிறது.

27 வயதான நிறுவனத்தின் பணியாளர் mayunliang, கடந்த திங்களில், சீருந்து ஒன்றை வாங்கினார்.

மேலதிகமான மக்கள் சீருந்துகளை வாங்குகின்றனர். ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகாலத்தின் வருமானத்தை பயன்படுத்தி, தற்போது, சீருந்தை வாங்கலாம். அதற்குப் பின், வார இறுதியில், சீருந்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம், அலுவலகத்துக்கு சீருந்திலேயே செல்லாம் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், மேலதிகமான சீன மக்கள் சீருந்துகளை வாங்கியுள்ளர். சீருந்துகள் கொண்டு வரும் வசதி மற்றும் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர். தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இது வரை, சீனாவில், சீருந்துடைய தனிநபர்களின் எண்ணிக்கை, உலகில் 26வது இடத்தை வகிக்கிறது.

1949ம் ஆண்டுக்கும், 1956ம் ஆண்டுக்குமிடையில், முதலாவது சீருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை சீனா உருவாக்கியது. சீனாவின் வாகனத் தொழில் துறையில் இதனால் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டன.

1978ம் ஆண்டு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவில் தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. பொருளாதார வளர்ச்சி மாதிரி, திட்டமிட்டப் பொருளாதாரத்திலிருந்து, சந்தைப் பொருளாதார அமைப்புமுறையாக மாறியது. இது, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துஆற்றலை வழங்கியது. சீனாவின் வாகனத் தொழில் துறை தொடர்ந்து வெகுவாக வளர்ந்து வருகிறது. சீன வாகன பொறியியல் கழகத்தின் ஆளுநர் zhangxiaoyu கூறியதாவது

1978ம் ஆண்டு, 1 இலட்சத்து 49 ஆயிரம் சீருந்துகளை நாங்கள் தயாரித்தோம். 30 ஆண்டுகால முயற்சிக்கு பின், 2008ம் ஆண்டில், ஏறக்குறைய ஒரு கோடி சீருந்துகளை நாங்கள் தயாரித்தோம். இது வரை, சீனாவின் வாகன தயாரிப்பு அளவு, ஜப்பானை அடுத்து, உலகின் 2வது இடத்தை வகிக்கிறது என்று அவர் கூறினார்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறையாக்கத்தோடு, சீனச் சந்தையிலான மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் படிப்படியாக காணப்பட்டுள்ளது, வெளிநாட்டு வாகனத் தொழில் நிறுவனங்களும் இதில் ஈர்க்கப்பட்டு, சீனாவில் முதலீடு செய்கின்றன. ஜெர்மனி Volkswagen நிறுவனம், சீனாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைத்த முதல் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். Volkswagen நிறுவனத்தைப் பொறுத்தவரை, சீனச் சந்தை மென்மேலும் முக்கியமாக மாறியுள்ளது என்று இந்நிறுவனத்தைச் சேர்ந்த சீனச் சந்தை விற்பனைப் பிரிவின் தலைமை இயக்குநர் hubo செய்தியாளரிடம் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:  

சீனா, உலகில் எமது நிறுவனத்தின் 2வது பெரிய சந்தையாக விளங்குகிறது. இது, ஜெர்மனிச் சந்தைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. பிரேசில், ஜெர்மனி முதலியவற்றைத் தாண்டி, சீனச் சந்தை, உலகில் எமது நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையாகும் என்று அவர் கூறினார்.

2000ம் ஆண்டு முதல், சீருந்துகள், சீன மக்களின் குடும்பத்தில் ஒரு வசதியாக நுழையத் துவங்கின. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சீருந்துகளைத் தயாரித்த வளர்ச்சி மாதிரியிலிருந்து, தற்சாப்புப் புத்தாக்க வளர்ச்சி வழிமுறைக்கு சீன வானகத் தொழில் துறை மாறியுள்ளது.

பெய்ஜிங் மாநகரின் மிக பெரிய வாகன வர்த்தகச் சந்தை ஒன்றின் தகவல் பிரிவின் தலைவர் guoyong கூறியதாவது:

தற்போது, இறக்குமதி வாகனங்கள், ஆண்டுதோறும், தேசிய வாகன விற்பனையில், 3 விழுக்காட்டை வகிக்கிறது. சீனச் சந்தையில், சொந்த வணிகச் சின்னம் வாய்ந்த சீருந்துகள், விற்பனைச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

1 2