• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-07 17:26:46    
சீனாவின் வாகனத் தொழில் துறையின் வளர்ச்சி

cri

சீனாவின் தற்சார்புப் புத்தாக்க சீருந்துகள், உள்நாட்டுச் சந்தையில் மட்டுமல்ல, வெளிநாட்டுச் சந்தையிலும் மிகவும் வரவேற்கப்படுகின்றன. 2008ம் ஆண்டு, சீனாவின் ஏற்றுமதி சீருந்து எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியது. Qirui,lifan,biyadi முதலியவை இதில் அடங்குகின்றன. Qirui நிறுவனத்தின் தலைமை மேலாளர் jinyibo கூறியதாவது

சீனாவின் ஏற்றுமதிச் சீருந்துகளில், எமது நிறுவனத்தின் சீருந்துகள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக, முதல் இடத்தை வகிக்கிறன. கடந்த ஆண்டில், 1 இலட்சத்து 36 ஆயிரம் சீருந்துகளை நாங்கள் ஏற்றுமதி செய்தோம் என்று அவர் கூறினார்.

Qirui நிறுவனத்தின் இரண்டு வகை சீருந்துகள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது சேவை புரிந்தன. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தன்மை வாய்ந்த கலப்பு விசைப்பொறி கொண்ட உந்துவண்டிகள், மின்னாற்றலால் இயங்கும் உந்துவண்டிகள் இதில் அடக்கம். தற்போது, இத்தகைய வண்டிகள் தடையின்றி வளர்ந்து வருகின்றன. jinyibo மேலும் கூறியதாவது

எமது நிறுவனத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தன்மை வாய்ந்த கலப்பு விசைப்பொறி உந்துவண்டிகள் சந்தையில் நுழைந்துள்ளன.அடுத்த ஆண்டில், மேலதிகமான புதிய வகை வண்டிகளை நாங்கள் தயாரிப்போம் என்றார் அவர்.

மின்னாற்றலால் இயங்கும் உந்துவண்டி தயாரிப்பில், biyadi மேம்பாடு வாய்ந்தது. இந்நிறுவனத்தின் பரப்புரைப் பிரிவின் மேலாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மேலதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள், எமது நிறுவனத்துடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. உலகில், மாபெரும் ஈர்ப்பு ஆற்றலை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அவர் கூறினார்.

உலக நிதி நெருக்கடியின் பின்னணியில், வாகனத் தொழில் துறையை முக்கியமாக வளர்க்க சீனா தீர்மானித்துள்ளது. புதிய எரியாற்றல் கொண்ட உந்துவண்டிகளுக்கு சலுகைக் கொள்கைகளை சீனா வழங்கும்


1 2