• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-10 15:18:14    
திபெத்தின பாரம்பரிய மருந்து லட்சியம்

cri
திபெத்தின மருந்து, திபெத் இனத்தின் பாரம்பரியப் பண்பாட்டில் தனிச்சிறப்பியல்பு மிக்க ஒரு பகுதியாகும். முழுமையான தத்துவம், சிறப்பான சிகிச்சை வழிமுறை, தேசிய இன பாணி ஆகியவற்றைக் கொண்ட மருத்துவ மற்றும் மருந்து அமைப்பு முறையாகவும் இது விளங்குகிறது. அதன் 2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றில் பாதரச சுத்தீக்கரிப்பு தொழில் நுட்பம் குறிப்பிடத்தக்கது.

திபெத்தினத்தின் புகழ்பெற்ற மருத்துவர்கள், சிக்கலான சிறப்பான பதனீட்டு வழிமுறையில், நச்சு மிகுந்த பாதரசத்தை நச்சு இல்லாத பயன் மிக்க மருந்தாக, சுத்தீக்கரித்து தயாரிக்கின்றனர். பாதரச சுத்தீக்கரிப்புத் தொழில் நுட்பம், திபெத்தின மருந்து தயாரிப்பில் மிகவும் தலைச்சிறந்த தொழில் நுட்பமாகும். உயிரின மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய பதனீட்டுத் தொழில் நுட்பத்தின் மூலம், நச்சு மிகுந்த பாதரசம் நச்சற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இது, திபெத்தின மருந்து தயாரிப்புத் தொழில் நுட்பத்தில் மிகவும் அற்புதமான பகுதியாகும்.
நடைமுறைக்கு வழிகாட்டும் சிறப்பு பாரம்பரிய வழிமுறை இருப்பதால், இந்தத் தொழில் நுட்பத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாண்டு 49 வயதான திபெத்தின் திபெத்தின மருத்துவக் கழகத்தின் வேந்தவர் நிமாசேரன் அவர்களில் ஒருவராவார்.
பாதரச சுத்தீக்கரிப்பு தொழில் நுட்பத்தைக் கற்றுத்தேர்ந்தால், திபெத்தின அரிய மருந்துகள் பலவற்றைத் தயாரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இக்கழகத்தைச் சேர்ந்த திபெத்தின மருந்துத் தொழில் நிறுவனத்தின் துணை மேலாளர் தோஜி, பாதரச சுத்தீக்கரிப்பு அனுபவங்கள் மிகுந்த மூத்த நிபுணராவார். இப்பொழுது, பாதரச சுத்தீக்கரிப்பு வழிமுறையில் நவீன தொழில் நுட்பம் சேர்க்கப்பட்ட போதிலும், பாரம்பரியத் தொழில் நுட்பம், முக்கிய இடம் வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய பாதரசச் சுத்தீக்கரிப்பு தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மாறவில்லை. மாட்டுச் சாணத்தை எரியூட்டுவதற்குப் பதிலாக மின்சார மற்றும் எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துகின்றோம் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் குறிப்பாக சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைக்கு வந்த பின், நடுவண் அரசு, பாரம்பரியப் பண்பாட்டைப் பேணிக்காத்து வெளிக்கொணரும் அளவை அதிகரித்துடன், திபெத்தின மருத்துவத் துறையும் பெருமளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. 2006ம் ஆண்டில், பாதரச சுத்தீக்கரிப்பு தொழில் நுட்பமும், ரென்சிங்சாம்ஜோ என்னும் மருந்து தயாரிப்பு தொழில் நுட்பமும், முதல் தொகுதி நாட்டு நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேவேளை, திபெத்தின மருந்துத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கும், மூலிகை மருந்து மூலவளப் பற்றாக்குறைக்குமிடையிலான முரண்பாட்டைத் தீர்க்கும் வகையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், திபெத்தின மூலிகை மருந்து பயிரிடுதல் தளங்களை உருவாக்கி, அழிவின் விளிம்பில் உள்ள திபெத்தின மூலிகைகளின் வளர்ப்புத் தொழில் நுட்ப ஆய்வுத் திட்டப்பணியை நடைமுறைப்படுத்தி, திபெத்தின மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை ஊட்டியுள்ளது.
1 2