திபெத்தின பாரம்பரிய மருந்து லட்சியம்
cri
தற்போது, திபெத்தில் திபெத்தின மருந்து தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 19 ஆகும். 360க்கு மேலான திபெத்தின மருந்துகளை, அவை உற்பத்தி செய்கின்றன. இதில் 20 மருந்துகள், நாட்டின் பாரம்பரிய மருந்து பாதுகாப்பு பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. திபெத்தின மருந்துகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் வரவேற்கப்படுவதால், இத்துறை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதுகெலும்புத் தொழில் துறையாக மாறியுள்ளது. திபெத்தின மருத்துவக் கழகத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கமிட்டி செயலாளர் லீ சியான் பேசுகையில், திறமைசாலிக்களுக்கான பயிற்சி, திபெத்தின மருந்து வளர்ச்சியில் மிகவும் முக்கிய தொடர்பாகும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
1989ம் ஆண்டில், நடுவண் அரசு, சுமார் 70 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்து, திபெத்தின மருத்துவக் கழகத்தைக் கட்டியமைத்தது. கடந்த 19 ஆண்டுகளில், மொத்தம் 1508 பட்டத்தாரிகளும் மாணவர்களும் இக்கழகத்தில் கல்விபெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பாரம்பரிய மருந்துத் தயாரிப்பு தொழில் நுட்பத்தைப் பேணிக்காத்து பரவல் செய்யும் வகையில், திபெத்தின மருத்துவக் கழகம், தொடர்புடைய வாரியங்களின் ஆதரவுடன், மருந்து தயாரிப்பு பற்றிய அரிய கையெழுத்து ஆவணங்களைத் திரட்டி, நடைமுறை அனுபவங்களுடன் இணைத்து பாதரசச் சுத்தீக்கரிப்பு பற்றிய புத்தகத்தை இயற்றியது. இதைக் கற்பிப்பதற்கான புத்தகங்கள், திபெத்தின மருந்து பற்றிய பள்ளிகளில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பாரம்பரிய மருந்துத் தயாரிப்புத் தொழில் நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் பரவலுக்கு, இவை, தத்துவ அடிப்படையை உருவாக்கியுள்ளன என்று திபெத்தின், திபெத்தின மருத்துவக் கழகத்தின் வேந்தர் நிமாசேரன் கூறினார்.
தவிர, மற்றொரு பாரம்பரிய திபெத்தின மருந்தான, ரென்சிங்சாங்ஜோவும் குறிப்பிடத்தக்கது. சீன மக்கள் குடியரசு மருந்து அகராதியில் பதிவு செய்யப்பட்ட இந்த திபெத்தின மருந்து, சளியைத் தடுத்து, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தக் கூடியது. அதன் தயாரிப்புத் தொழில் நுட்பம், கி.பி 8வது நூற்றாண்டில் துவங்கியது. இந்த சிறிய உருண்டையில், தங்கம், வெள்ளி, முத்து தவிர, சுமார் 200 தாவர வகைகளும் கனிமப்பொருட்களும் சிறியதளவில் சேர்க்கப்படுகின்றன. இப்போது, இத்தகைய மருந்து தயாரிப்பு தொழில் நுட்பம், பயனுள்ளதாக பரவியுள்ளது. சீனாவில் பல திபெத்தின மருந்து தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள், நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதைப் பேணிக்காத்து வளர்த்து வருகின்றன. நவீன அறிவியலையும் பாரம்பரிய தொழில் நுட்பத்தையும் இணைத்து பயன்படுத்தி தயாரிக்கும் பாரம்பரிய திபெத்தின மருந்துகள் தொடர்நது மக்களுக்கு உடல்நலத்தை வழங்கி வருகின்றன. 1 2
|
|