இதற்கு பின், புதிய ரக, உயர் விளைச்சல் தரும் உயர் ரக நெல்லை அவர் ஆய்வு செய்யத் துவங்கினார். பல அறிவியல் பரிசோதனைகளின் மூலம், மேம்பட்ட கலப்பு நெல்லின் ஒரு மூ பரப்பின் விளைச்சல் படிப்படியாக உயர்ந்து, 800 கிலோகிராமை எட்டியது.
கலப்பு நெல் ஆய்வு மாபெரும் சாதனைகளைப் பெற்றதால், சீனாவின் மொத்த நெல் விளைச்சல் சுமார் 60 கோடி டன்னுக்கு உயர்ந்தது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டதோடு, உலக தானிய உற்பத்தியில் அற்புதத்தை சீனா உருவாக்கியது. முழு உலகின் 7 விழுக்காட்டு விளை நிலங்களை கொண்டு உலகின் 22 விழுக்காட்டு மக்களுக்கு தேவையான தானிய அள சீனா நிறைவேற்றியுள்ளது. தவிர, சீனாவின் கலப்பு நெல் தொழில் நுட்பம் இந்தியா, வியட்நாம் ஆகிய 20க்கு அதிகமான நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பரவியது.
சீனாவில், Yuan Longping போல் பல அறிவியலாளர்கள் உள்ளனர். அவர்களது அறிவியல் தொழில் நுட்பங்கள் உற்பத்தி ஆற்றலை மாற்றி, நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு உதவியுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதை இவை உணர்த்துகின்றன.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட துவக்கம் முதல், அறிவியல் தொழில் நுட்ப பணியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டத்தை சீனா சிறப்பாக இயற்றியது.
1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா செயல்படுத்தியது முதல், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பமே முதல் உற்பத்தி ஆற்றலாகும் என்ற உத்தியை சீனா நிர்ணயித்து, அறிவியல் தொழில் நுட்ப திட்டப்பணிகளை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் திறமைசாலி பயிற்சிக்கும் துணைபுரிந்த அமைப்பு முறையை உருவாக்க பாடுபட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில், தேசிய திட்டம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அறிவியல் தொழில் நுட்பம் முக்கிய பங்காற்றி வருகின்றது என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் Xu heping தெரிவித்தார். அவர் கூறியதாவது:
சீனாவின் ஒட்டுமொத்த அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலுக்கும் சர்வதேச முன்னேறிய நிலைக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருகின்றது. சில துறைகள் சர்வதேச முன்னணியில் நுழைந்து, உலக அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் செல்வாக்கு கொள்கின்றன. சமூகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் அறிவியல் தொழில் நுட்பம் பெரிதும் உதவுகின்றது என்று அவர் கூறினார்.
தற்போது, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களின் அமோக அறுவடை காலத்தில் சீனா நுழைந்துள்ளது. ஆண்டுதோறும் புதிதாக ஆய்வு செய்த அறிவியல் தொழில் நுட்ப பலன்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. இவை பெரும்பாலும் எரியாற்றல், வேளாண், உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளை கேர்ந்தவை.
1 2 3
|