• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-14 17:09:38    
அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான வளர்ச்சி

cri

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், கணிசமான அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இது மிக சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டது. திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானம், தகவல் தொலைத்தொடர்பு, அறிவார்ந்த போக்குவரத்து, உணவுச் சுகாதாரம், வானிலை முன் அறிவிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு துறைகளில் புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பல புதிய அறிவியல் தொழில் நுட்பங்களை உட்புருத்திய பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, ஒலிம்பிக் எழுச்சிக்கும் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களுக்குமிடையிலான பிழையற்ற ஒருங்கிணைப்பு என்று உலகம் அழைத்தது. விளையாட்டு பணிகளுக்கு பொறுப்பான துருக்கியின் முன்னாள் அமைச்சர் Mehmet Ali Sahin கூறியதாவது:

பல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாகளில் நான் கலந்துகொண்டேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பானது, திறமையானது. அத்துடன், புதிய உயர் தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக பயன்படுத்தியது என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மக்களின் வாழ்க்கைக்கு மேலதிக வசதிகளை அறிவியல் தொழில் நுட்பம் வழங்கும். நெல் நிபுணர் Yuan Longping போல் சீனாவின் பல அறிவியலாளர்கள் மேலும் உயர் அறிவியல் தொழில் நுட்ப நிலையை கண்டறிந்து வருகின்றனர்.

3வது கட்ட கலப்பு நெல்லின் முன் மாதிரி விளைநிலத்தின் விளைச்சல் ஒரு மூ பரப்புக்கு 900 கிலோகிராமாகும். இதில் நான் நம்பிக்கை கொள்கின்றேன். திட்டப்படி, 2010ம் ஆண்டு, இந்த நோக்கம் நனவாக்கப்படும் என்று Yuan Longping கூறினார்.


1 2 3