• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-15 15:56:22    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே! உங்களது பங்கேற்பின் அடையாளமாய் விளங்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு தொடர்ந்து கருத்து கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பிவரும் நேயர் நண்பர்களுக்கு எமது நன்றி.
கலை சீன வானொலிக்கு நேயர் கடிதங்கள் எழுதி வழங்கிவரும் ஆதரவை எல்லா நேயர் அன்பர்களும் வழங்க கேட்டு கொள்கிறோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கமாக, பதிவுசெய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கருத்துக்களை கேட்கலாம்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றிய குடியாத்தம் கே. மகராஜன் அனுப்பிய கடிதம். சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விவரிக்கும் தொகுப்பாய் இந்நிகழ்ச்சி அமைந்தது. சிக்கனமான எரியாற்றல் பயன்பாடு, மறுசுழற்சி முறை ஆகியவை பற்றி தெளிவாக அறிந்தேன். கழிவு நீர் கையாளும் ஆலைகள், பழைய மின்கலத்தை பயன்படுத்தி புதிய மின்கலன்கள் தயாரிப்பது போன்ற முயற்சிகள் வரவேற்கதக்கவை. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாய் அமையும்.


தமிழன்பன் அடுத்து, இலங்கை வாழைச்சேனையிலிருந்து எம்.எச்.சியான் எழுதிய கடிதம். சீன வானொலி நேயராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீனாவை பற்றி அறிய விரும்பும் எங்களது சிந்தைக்கு விருந்து படைப்பதாக சீன வானொலி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. சீனத் தமிழொலி இதழ் சீனா பற்றிய தகவல்களை அருமையான படங்களோ விளக்கும் படைப்பாக வெளிவருகிறது. பொது அறிவுப்போட்டிகள் நேயர்களின் பங்கேற்பை அதிகரிக்க செய்கின்றன. இணையத்தை பயன்படுத்த நேயர்களை தூண்டுவது, இக்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு ஏற்றபடி எல்லா நேயர்களை வளர செய்யும்.
கலை தொடர்வது, ஆந்திராவிலிருந்து கடிதம் அனுப்பியுள்ள மும்பை சுகுமார், மும்பை சென்றபோது கேட்ட சீன வானொலி நிகழ்ச்சிகளை பற்றி எழுதியுள்ளார். தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் அவ்வளவாக இல்லாத மும்பை மாநகரில், இணையதளம் மூலம் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்தேன். உலக தகவல்கள் பலவற்றை செய்திகள் அறிய தந்தன. பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதையும், பெய்ஜிங்கில் வேலைதேடி வந்த விவசாயிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதையும் அறிந்தேன்.


தமிழன்பன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். திபெத் பற்றிய பல தகவல்களை இந்நிகழ்ச்சியில் அறிந்தேன். நீலகிரியில் உள்ள மக்கள் நாங்களே கடல்மட்டத்திலிருந்து 7,500 அடி உயரத்தில் வாழ்ந்து குளிர், பனி போன்றவற்றை அனுபவித்து வருகிறோம். அப்படியானால் 11,000 அடி உயரத்தில் வாழும் திபெத்தியரின் நிலையை உணர முடிகிறது. திபெத்தின் தலைநகரான லாசா 1300 ஆண்டுகால பழமையுடையது என்பதையும் அறிந்தேன். நீலகிரியிலும் திபெத்தியர் பலர் உள்ளனர். பொரும்பாலும் இவர்கள் வணிகர்களாக இருப்பதால் அவர்களுக்கென ஒரு நிரந்தர வணிக மையம் இங்குள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
கலை அடுத்து, சேலத்திலிருந்து எ. வேலு இன்றைய திபெத் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். திபெத்தின் கல்வி வளர்ச்சி பற்றிய தொகுப்பாக அமைந்த நிகழ்ச்சியில், குறிப்பிட்ட ஒரு சிலரே கற்க முடியும் என்பது முற்றிலுமாக மாறியுள்ளதை அறிந்தேன். திபெத்திய மக்களனைவரும் இன்று கல்வியில் வளர்ச்சி கண்டிருப்பது திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் தந்துள்ள தலைசிறந்த மாற்றம் என்று சொல்லலாம்.

1 2