மின்னஞ்சல் பகுதி முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அலங்கரிக்கப்பட்டு அழகுடன் திகழ்கின்றது. நவசீனாவின் வைரவிழா காலத்தில் அதன் சிறப்பியல்புகளை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ள செய்வதோடு, வண்ண விளக்குகள், அலங்கார நுழைவாயில்கள், பல்லிசை இராகங்கள் எனவும் அசத்திக்கொண்டிருப்பதை அறிந்தேன். இந்த நேரத்தில் சீன வானொலி தமிழ் பிரிவிவுக்கும், பிற பணியாளர்களுக்கும், சீன மக்களுக்கும் மகிழ்வோடு எனது வைரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் பெருமை அடைகின்றேன். சீனா 171 நாடுகளோடு தூதாண்மை உறவை வளர்த்து அதை நிலைநிறுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு. உலகநாடுகளோடு 300க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் நிறைவேற்றிருப்பது மூலம் சீனாவின் தூதாண்மை உறவின் ஆழத்தை உணரமுடிகின்றது.
ஈரோடு, சி. சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல் சீன சோஷலிச கிராமப்புறக் கட்டுமானம் பெற்றுள்ள சாதனைகளை செய்தித்தொகுப்பின் மூலம் அறிந்தேன். பல ஆண்டுகளாக வசூலித்து வந்த வரியை நீக்கியதால் விவசாயிகள் நலன்கள் பெற்றதையும், தானியம் பயிரிடுதல், தானிய விதை, வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு சலுகையளித்ததையும் செய்தித்தொகுப்பில் அறிய முடிந்தது. நாட்டின் முதுகெலும்பு கிராமபுறங்களே. கிராமங்களை மேம்படுத்தினால் நாடு பொருளாதார முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதற்கு சீனா ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்கா ஆல்பர்ட் அனுப்பிய மின்னஞ்சல் சீனாவின் ஹெலிகாப்டர், சீன-இந்திய எல்லையைக் கடந்தது என்ற இந்தியாவின் தனியொரு செய்தி ஊடகம் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்தி வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வதந்திகளைக் பரப்பி இருநாட்டுக்கும் இடையே பகைமையை வளர்க்க எண்ணும் முயற்சி ஒருபோதும் நனவாகாது என்று இது தொடர்பாக பதிலளித்தபோது செய்தித் தொடர்பாளர் சியாங்யூ அம்மையார் நல்லிணக்கத்தோடு கருத்து கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல் வெளிநாட்டவர் பார்வையில் சீனா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் 11வது ஆசிய கலைவிழா எனும் பண்பாட்டு நிகழ்ச்சியை வைத்து சீன இந்திய நட்புறவு எவ்வளவு உயர்ந்தது என்பதை அறிய முடிந்தது. ஒரு நாட்டின் கலை அம்சமும், பண்பாட்டையும் இணைத்து மக்களின் இரசனையை உணர்த்த முடிகின்றது. இது பல்வேறு நாட்டு மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஆசிய நாடுகளை இணைக்கின்றதை அறிந்து பெருமையாக இருக்கின்றது. ஒரு நாட்டின் பண்பாடு, கலை இரண்டையும் விளக்குவதற்கு 11வது ஆசிய கலைவிழா போன்ற நடவடிக்கைகள் அவசியம். ஊட்டி, S.K.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல் ஆகஸ்டு 31 ஆம் நாள் திங்கள் கிழமை நீலகிரி மாவட்ட சீன வானொலி நேயர்கள் மன்றத்தின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டின் 8ஆவது கூட்டமான இதில் நவசீனாவின் வைர விழாவையும், அவ்விழாவுடன் இணைத்து சீன வானொலி தமிழ்ப்பிரிவின் 46ஆம் ஆண்டு நிறைவையும் சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, அழகான சிச்சுவான் எனும் பொது அறிவுப் போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் பரிசு பெற்ற நேயர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல் சீனாவில் பணியிடங்களில் நோய் தடுப்பு பற்றிய சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி மிக அருமை. பொருளாதார வளர்ச்சியுடன் தொழிலாளர் நலன்களையும் வளர்க்க முடியும் என்பதற்கு சீனா ஒரு முன்மாதிரியாக திகழ்வது பாராட்டத்தக்கதாகும். ஆரம்ப நிகழ்ச்சிகளில் தொடக்கமாக செய்திகள் அதனுடன் இணைத்து செய்தித்தொகுப்பை வழங்கி வருவதும் சில நிமிடங்கள் இசைவிருந்து ஒலிபரப்புவதையும் கேட்டு இரசித்தேன். ஒலிபரப்பில் தொடரும் புதிய மாற்றங்களை வரவேற்க காத்திருக்கின்றோம். மதுரை அண்ணாநகர் என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டபின் சர்வதேச சந்தையில் பொருட்களின் தேவை மிக குறைந்துள்ளது. என்வே சீனாவின் வெளிநாட்டு வர்த்தக தொழில்நிறுவனங்கள் தங்கள் பார்வையை உள்நாட்டு சந்தைக்கு திருப்பின. சீன அரசின் பல பொருளாதார ஊக்குவிப்பு கொள்கைகளால் உள்நாட்டு சந்தையின் தேவை அதிகரித்து வருவது நெருக்கடியை சமாளிக்கும் நல்ல வழிமுறையாக அமையும். சீன அரசு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களை அழைத்து உள்நாட்டில் பொருட்காட்சிகளையும் நடத்தியது. சீன நடுவண் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் உள்நாட்டு விற்பனை அதிகரித்துள்ளதற்கு பாரட்டுக்கள். ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன் அனுப்பிய மின்னஞ்சல் செய்திகளில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 35வது இடைநிலைப் பள்ளியை பார்வையிட்டதையும், அப்போது அவர் ஆசிரியர்களின் அரசியல், சமூக, வருமானத் தகுநிலையை உயர்த்திடவும், ஆசிரியப் பணியை மதிப்பு மிக்கத் தொழிலாக உயர்த்தவும் பேசியது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நானும் ஓர் ஆசிரியர் என்பதால் அவருக்கு நன்றி கூறவும் கடமைப் பட்டுள்ளேன். செந்தலை, என்.எஸ். பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை இந்தியா விரிவுபடுத்தியிருப்பது பற்றி சீன வானொலியில் கேட்டேன். இந்தியாவின் இந்நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும். உலகில் இந்தியாவின் வளர்ச்சியை முன்னேற்றும் என கருதுகிறேன். வர்த்தக கொள்கையை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியா வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
1 2
|