முழு மனதோடு செயல்படும் Cui Jing அம்மையார்
cri
Cui Jing என்னும் பெண், He Bei மாநிலத்தின் Cang Zhou நகரின் Wu Qiao மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1997ஆம் ஆண்டு அவர் Cang Zhou வானொலி மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தில், ஆங்கில மொழித் துறையில் பட்டம் பெற்றார். அப்போது ஆங்கில மொழி ஆசிரியராக பணி புரிய வேண்டுமென்பது, Cui Jingவின் மிகப் பெரிய விருப்பம். தன் விபரக் குறிப்பை எடுத்துக்கொண்டு, வேலைக்கு ஆள்சேர்க்கும் கூட்டங்களுக்கு சென்றார். ஆனால், தனக்கு ஏற்ற பணிவாய்ப்பை அவர் பெறவில்லை. இது பற்றி வருத்தம் அடைந்த அவர், தனது எதிர்காலம் மீது நம்பிக்கை இழந்தார். ஆனால், Cui Jing முயற்சியை கைவிடவில்லை. தமது அறிவு மற்றும் திறனைச் சார்ந்து, வெளியூருக்குச் சென்று பணிவாய்ப்பைத் தேட அவர் தீர்மானித்தார். 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், 56 யுவானுடன், அவர் He Bei மாநிலத்தின் தலைநகர் Shi Jia Zhuangக்குச் சென்றார். Shi Jia Zhuang நகருக்கு வந்த துவக்கத்தில், Cui Jing இரவில் ஒரு சக மாணவரின் விடுதியில் தங்கியிருந்தார். பகல் வேளையில், அவர் வேலை தேடினார். அப்போது அவர் சிறிய உணவகம் ஒன்றில் பணிப் பெண்ணாக பணி புரிந்தார். சிறு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்தார். பின்னர், அவர் திருமணம் செய்தார். அவருக்கு பிள்ளை பிறந்த பின், அவர் வேலையை இழந்தார். வெளியே வேலைவாய்ப்பைத் தேடும் பொருட்டு, தமது பிள்ளையைப் பராமரிக்கும் ஒரு செவிலித்தாயை அவர் முதலில் நாட வேண்டியிருந்தது. ஆனால், மூன்று திங்களாக, நல்ல செவிலித்தாயை அவரால் கண்டறிய முடியவில்லை. இது, அவருக்கு புதிய யோசனையை தந்தது. பொது மக்களின் வாழ்க்கை வேகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், திறமையான செவிலித்தாய்க்கான தேவை அளவும் அதிகரிக்கும். இந்நிலையில் செவிலித்தாய்க்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனம், வரவேற்பு பெறுவது உறுதி என்று அவர் கருதினார்.
செவிலித்தாய் பயிற்சி நிறுவனத்தைத் திறக்க வேண்டுமானால், செவிலித்தாயாக வேலை செய்யும் அறிவை முதலில் தாம் கற்றுத் தேர வேண்டும். அப்போதைய Shi Jia Zhuang நகரில், சிறந்த செவிலித்தாய் பயிற்சி நிறுவனம் ஏதும் இல்லை. பெய்ஜிங்கில் உள்ள ஒரு வீட்டு சேவை நிறுவனத்தில் Cui Jing தாமாக கற்றுக்கொண்டு, வீட்டுப் பணிப்பெண்ணாகவும், Yue saoஆகவும் வேலை செய்தார். Yue Sao பிரசவித்த தாயையும் சிசுவையும் பராமரிக்கும் பணிப் பெண் ஆவார். அவர்கள் தரமிக்க வீட்டுச் சேவையாளர்களில் அடக்கம். 2003ஆம் ஆண்டு, Cui Jing, yue saoயாக, வேலை வழங்குபவரின் வீட்டுக்கு வந்தார். ஆங்கில மொழி ஆசிரியராக மாற விரும்பிய அவர், இறுதியில் Yue Saoஆக பணிபுரிய வேண்டியிருந்தது. அவர் மனதளவில் குழம்பி வருத்தம் அடைந்தார். ஒரு தாயாக இருந்த போதிலும், பிறரின் பிள்ளையைப் பராமரித்த போது, அவர் சரியாக செய்யவில்லை. நடைமுறையில், அவர் சிசுவின் ஒவ்வொரு செயலையும் உணர்வுப்பூர்வமாக கவனித்தார். இதன் மூலம், சிசுக்களுடன் தொடர்பு கொண்டு முழு மனதோடு சிசுக்களைப் பராமரிப்பதை அவர் படிப்படியாக கற்றுத் தேர்ந்தார். நடைமுறை அனுபவங்களை பொறுமையுடன் சேகரித்தது தவிர, Cui Jing குழந்தைகள் பராமரிப்பு பற்றிய முக்கிய குறிப்புகளையும் சிந்தித்து, ஓராண்டு காலத்தில், 50 ஆயிரம் எழுத்துக்களுடைய கைக்குழந்தை பராமரிப்பு குறிப்பை எழுதினார். Yue Sao என்ற இந்த சிறப்பு சேவை பற்றி அவர் ஆழ்ந்த புரிந்துணர்வு கொண்டார். "வேலை வழங்குபவரின் குடும்பத்தில் ஒன்றிணைந்து, அவரது குடும்பத்தை தமது குடும்பமாகக் கருதினால்தான், செவ்வனே பணிபுரிய முடியும்" என்று அவர் கூறினார். 1 2
|
|