• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-18 10:05:50    
முழு மனதோடு செயல்படும் Cui Jing அம்மையார்

cri

2004ஆம் ஆண்டு மே திங்கள், Cui Jing Shi Jia Zhuang நகருக்குத் திரும்பி, Man Yi Yue Sao வீட்டு சேவை நிறுவனத்தை நிறுவினார். நகரில் வேலை இழந்த பெண்களையும், கிராமப் பெண்களையும் அமர்த்தி, அவர்களுக்கு இந்நிறுவனம் சிறப்பு பயிற்சி வழங்குகிறது. இதற்குப் பின், அவர்கள் வாடிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இப்பெண்களின் குடும்பச்சூழல் வசதியில்லாத காரணத்தால், இந்நிறுவனம் அவர்களுக்கு இலவசப் பயிற்சியை அளிக்கின்றது.
இந்நிறுவனம் நிறுவப்பட்ட துவக்கத்தில், பிரசவித்த தாய்க்கும் சிசுவுக்கும் சேவை அளிக்கும் Yue Sao என்ற புதிய சேவையை Shi Jia Zhuang நகரவாசிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் குறைவாகவே இருந்தனர். கிராமவாசிகள் இந்நிறுவனம் பற்றி வெகு விரைவில் அறிந்து கொள்ளத் துணை புரியும் பொருட்டு, Cui Jingஉம், அவரது இரண்டு உதவியாளர்களும் சில பரப்புரை குறிப்புகளை அச்சடித்து, சாலைகளில் வினியோகித்தனர்.
"துவக்கத்தில், இந்நிறுவனத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. இதன் சேவை பற்றி பலருக்கு தெரியாது. இந்நிறுவனம் நிறுவப்பட்ட துவக்கத்தில், மூன்று பேர் மட்டுமே இருந்தனர். குடியிருப்புப் பிரதேசங்களின் நுழைவாயிலிலும், காய்கறிச் சந்தைகளிலும் பரப்புரை குறிப்புகளை வினியோகித்து, எங்கெங்கும் விளம்பரங்களை ஒட்டினோம்" என்று Cui Jing கூறினார்.

இந்நிறுவனம் நிறுவப்பட்ட துவக்கத்தின் சில திங்களில், நிறுவனம் பெரியளவில் செயல்படவில்லை. வீட்டுச் சேவையாளர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகு, வாடிக்கையாளர்கள் இல்லை. அல்லது வாடிக்கையாளர்கள் இருந்த போது, சேவையாளர்கள் இல்லை.
இன்னல்களை எதிர்நோக்கி, Cui Jing ஆழமாக சிந்தித்தார். பயிற்சி வழங்குவது, சேவையாளர்களை அனுப்புவது என்ற போக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டன என்று அவர் கண்டு அறிந்தார். இதனால். அவர் உடனடியாக நிர்வாக மாதிரியை மாற்றி, "முன்பதிவுப் படிவ" பயிற்சி, "கையிருப்பு" பயிற்சி ஆகிய இரண்டு வகை மாதிரிகளை மேற்கொண்டார். "முன்பதிவுப் படிவ" பயிற்சி என்றால், வாடிக்கையாளர்களின் தேவையை முன்னதாகவே அறிந்து கொண்டு, அவர்களின் தேவைக்கிணங்க அளிக்கப்படும் பயிற்சியாகும். "கையிருப்பு" பயிற்சி என்றால், குறிப்பிட்ட நேர பயிற்சி பெறும் வீட்டுச் சேவையாளர்கள் திரட்டப்படுவதாகும். வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் போது, இச்சேவையாளர்கள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த இரண்டு வகை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்ட பின், விரைவாக பலன் கிடைத்தது. படிப்படியாக Man Yi Yue Sao வீட்டுச் சேவை நிறுவனத்தின் அலுவல் அளவு குறிப்பிட்டத்தக்க வகையில் விரிவாகியது. இதன் புகழும் அதிகரித்தது.

Cui Jing ஒவ்வொரு வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் நேர்மையுடன் பயிற்சி வழங்கி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அன்புடன் சேவை அளிப்பதால், அவர் பெரும் மதிப்பையும், நல்ல பெயரையும் பெற்றுள்ளார். இந்நிறுவனம் நிறுவப்பட்ட ஐந்து ஆண்டுகளில், மொத்தம் 4 ஆயிரம் Yue Caoகளுக்கும், வீட்டுச் சேவையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில், நகரில் உள்ள வேலை இழந்த பெண்கள் ஆயிரத்துக்கு அதிகமானோர். கிராமப் பெண்கள் சுமார் மூவாயிரத்துக்கு அதிகமானோர். அனைத்து பெண்களும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர், .பெய்சிங், ஷாங்காய், Tian Jin முதலிய பெரிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது, Cui Jingவின் நிறுவனத்தின் அலுவல், Yue Sao, வீட்டுச் சேவையிலிருந்து, சுத்தம் செய்தல், உழைப்பாற்றல் ஏற்றுமதி செய்தல் ஆகிய துறைகள் வரை விரிவாகியுள்ளது. Cui Jing இரண்டு கிளைகளைத் திறந்து வைத்துள்ளார். Yue Saoகளும், வீட்டுச் சேவையாளர்களும், சுத்தம் செய்யும் சேவையாளர்களுமாக சுமார் 300 பேர் இந்நிறுவனம் மற்றும் இதன் கிளைகளில் இருக்கின்றனர். இந்நிறுவனம் மற்றும் கிளைகளின் ஆண்டு நிகர வருமானம் ஒரு லட்சம் யுவானை எட்டியுள்ளது. Shi Jia Zhuang நகரின் வீட்டு சேவைத் துறையில் இந்நிறுவனம் பிரபலமாகி விட்டது.
"எதைச் செய்தாலும், முதலில் நேர்மையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக சேவைத் துறையில், வெவ்வேறான வாடிக்கையாளர்களுக்கு முழு மனதோடு சேவை புரிய வேண்டும்" என்றார் Cui Jing அம்மையார்.
1 2