கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய நேயர் அன்பர்களின் கருத்துக்களை இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகின்றோம். கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுபப்பட்ட கருத்துக்களை கேட்கலாம். கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, சேந்தமங்கலம் கே.அசோக்குமார் சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சான்சி மாநிலத்திலுள்ள கற்குகை சிற்பங்கள் பற்றி கேட்டேன். இந்த சிற்பங்களில் காணப்படும் ஆடை, அணிகலன்கள் மற்றும் வடிவ அமைப்புகள் கலைநுட்பங்களுடனும், மிகுந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுவதை இந்நிகழ்ச்சி விளங்கியது. இதை போன்ற கற்குகை சிற்பங்கள் சீனாவில் பல இடங்களில் காணப்படுவதாகவும், இவை 1000 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்றும் அறிந்தேன்.
தமிழன்பன் தொடர்வது, வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி இராமபாளையம் ஆர். சுகன்யா அனுப்பிய கடிதம். வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை எம்முன் கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் நடைபெற்ற வேலைநிறுத்தம் பற்றி அறிந்தேன். உலக தொழிலாளர் வரலாற்றில் மிக அதிக நாட்கள் நீடித்த இந்த வேலைநிறுத்தம் 16 திங்கள் காலம் நடைபெற்றது வியப்பளித்தது. கலை நெய்வேலியிலிருந்து லோ.பசுபதி, நேயர்நேரம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து அதிக நேயர்கள் கருத்து கடிதங்கள் எழுதுவதை நேயர் நேரம் நிகழ்ச்சி வழியாக அறியமுடிகிறது. சீன வானொலிக்கு இவ்வளவு அதிகமான நேயர்கள் இருப்பதை கண்டு பெருமிதம் அடைந்தேன். மேலும் நேயர் விருப்பம், உங்கள் குரல், நேயர் கடிதம், நேருக்கு நேர் ஆகிய நிகழ்ச்சிகள் சீன வானொலி நேயர்களை எமக்கு அறிமுகப்படுத்துகின்றன. நன்றிகள் தமிழன்பன் அடுத்தாக, சென்னையிலிருந்து எ.அப்துல்காதர் சீன உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டம் பற்றி அனுப்பிய கடிதம். ஜூன் திங்கள் தொடக்கம் சீனாவின் உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. உணவுப்பொருள் பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இச்சட்டம் சட்டப்படியான உத்தரவாதம் அளிக்கும். உணவுப்பொருள் பாதுகாப்பில் சீன அரசு காட்டும் கவனத்தையும் இது சுட்டுகிறது.
கலை சேலத்திருந்து எஸ்.எம்.வெங்கடேசன் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இது, சீன மொழியை நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் சிறந்த வாயிலாக அமைகிறது. இதன் மூலம் சீன மொழிச் சொற்களும், சீன மொழி பற்றிய பொது அறிவு தகவல்களும் அதிகமாக கிடைக்கின்றன. இந்த சொற்களை நாங்கள் தமிழ் நாட்டில் பேசாவிட்டாலும், சீன மொழி கற்கும் ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். தமிழன்பன் சென்னை எஸ். ரேணுகா தேவி உணவு அரங்கம் பற்றி அனுப்பிய கடிதம். பட்டாணி உணவு செய்முறை சமையல் குறிப்புகள் இதுவரை ஒலிபரப்பிய உணவு வகைகளில் சற்று வித்தியாசமான சமையல் முறையாகும். சமையல் குறிப்புகளை வழங்குகின்ற விதம் அருமையாக உள்ளது. இந்த சமையல் குறிப்பில் தமிழகத்தில கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை சேர்த்து செய்கின்ற வகையில் இருந்தது சிறப்பு கலை நந்தியாலம் ற்றி. தனிகாசலம் சீன வானொலியின் வளர்ச்சி இலக்கு குறித்து அனுப்பிய கடிதம். இணையதள சேவைகளை அதிகரித்துகொள்ள சீன வானொலி எடுக்கின்ற முயற்சிகளை பாராட்டுகின்றேன். அழகான புகைப்படங்கள், விபரமான விளக்கங்கள் அனைத்தும் இணையதள பக்கங்களில் காணமுடிகிறது. இணையதளத்தை பயன்படுத்தும் நேயாகளை அதிகரிக்க இணையதள பொது அறிவு போட்டியை நடத்தியது சிறப்பு. அதிகமான நேயர்கள் இணையதளம் பயன்படுத்தும் ஆர்வம் மேலோங்கியுள்ளது என்றால் மிகையாகாது. தமிழன்பன் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் 46வது ஆண்டு நிறைவுக்கு பாராட்டு தெரிவித்து ஈரோடு எம்.சி.பூபதி எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 46வது ஆண்டை நிறைவுசெய்து 47 வது ஆண்டை தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் தமிழ்ப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய சீன நட்புறவுக்கு தமிழ்ப்பணி நட்புப்பாலமாக பணியாற்றி வருவதற்கு நன்றி. சீன வானொலியின் தமிழ்ப்பணி வளர்க.
1 2
|