• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-22 14:31:39    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
டாவோஸ் கருத்தரங்கில் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. சீனா பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கைகள் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் அதிக பயன்களை தந்துள்ளதால் சீனப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த ஆண்டின் முற்பாதியில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7.1% அதிகரித்து, சாதனைகள் புரிந்தமைக்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளே காரணம் என அவர் கூறியுள்ளார். கட்டமைப்பை வலுவாக்குவதை முக்கிய காரணியாகக் கொண்டு அதிக நுகர்வு மூலம் பொருளாதார முன்னேற்றப்பாதையில் கவனம் செலுத்துவோம் எனக்கூறிய கருத்து அரசியல் வாழ்க்கையில் அவர் அனுபவமிக்க சிகரம் என உணர வைக்கிறது.
செந்தலை, என்.எஸ். பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
வெளிநாட்டு வர்த்தக கொள்கையை இந்தியா விரிவுபடுத்தியிருப்பது பற்றி சீன வானொலியில் கேட்டேன். இந்தியாவின் இந்நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும். உலகளவில் இந்தியாவின் வளர்ச்சியை இது முன்னேற்றும் என கருதுகிறேன். வர்த்தக கொள்கையை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியா வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.


திருப்பூர் சின்னபன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலியின் க‌ட்டுரைத்தொகுப்பினை இணைய‌த‌ள‌த்தில் ப‌டித்தேன். அதில் "மறுமலர்ச்சியடையும் இந்திய பொருளாதாரம்" என்ற‌ த‌லைப்பில் க‌ருத்துக்க‌ளை வாசித்தேன். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து வருவதை பார்த்தால் இந்தியா பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளது" என்ற‌ வ‌ரிக‌ள் என்னை ம‌கிழ்வுற‌ச்செய்தன.
வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
செப்டம்பர் திங்கள் 9 ஆம் நாள் இடம்பெற்ற சீனப் பாடல் ஒன்றை கேட்டேன். சிங்காய் திபெத் இருப்புப்பாதையின் தனிச் சிறப்புக்களை போற்றும் இப்பாடலை கேட்டபோது, என் எண்ணங்கள் திபெத்தில் பயண செய்த நாட்களை நோக்கி பறந்தது. திபெத்தின் லாசா நகரில், லாசா செய்தி மையம் வழங்கிய விருந்தின் இறுதியில் •வான் பாதை• என்ற இப்பாடல் ஒலித்தபோது, அவ்விருந்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் அப்பாடலுடன் இசையோடு இணைந்து பாடினார். குறிப்பாக, சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர், உரத்த குரலில் இப்பாடலை பாடிய நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.


மீனாட்சிபாளையம், கா. அருண் அனுப்பிய மின்னஞ்சல்
40 வயதான இணையம் உருவான விதம் அதன் இன்றைய வியத்தகு வளர்ச்சி, பயன் மற்றும் தீமைகள் பற்றி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் செவிமடுத்தேன். முன்பெல்லாம் மின்னஞ்சல் அனுப்ப, பேருந்தில் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்திற்கு சென்று இணைய உலாவகம் செல்ல வேண்டும். மின்னஞ்சலுக்கு குறைந்தபட்சம் 20 ரூபாய்யும், 3 லிருந்து 4 மணிநேரம் வரையும் செலவு செய்ய வேண்டும். ஆனால் இப்போது செல்லிடப்பேசியில் கிடைக்கும் இணையவசதி மூலம் என்னால் நினைத்த நேரத்தில் குறைந்த கட்டணத்தில் மின்னஞ்சல் அனுப்பமுடிகிறது, இணைய தளங்களையும் பார்வையிட முடிகிறது. நேரமும் மிச்சம், பணமும் மிச்சம். ஆனால் மேடு என்று இருந்தால் பள்ளமும் இருக்குமல்லவா? அதுபோல் நன்மை என்று ஒன்று இருந்தால் தீமையும் இருக்கத்தான் செய்யும். இணைய வசதியும் இதற்கு விதிவிலக்கல்ல.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
ஆசிரியர் சமூகத்திற்கு சீன தலைமை அமைச்சர் விடுத்த வேண்டுகோள் மிகவும் அவசியமானது. எதிர்கால சமுதாயத்தின் தூண்களான மாணவர்களை உருவாக்கும் திறமை ஆசியர்களிடம் தான் இருக்கின்றது. எனவே ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புடன் விளங்க வேண்டும். சீனாவில் செப்டம்பர் 10-ஆம் நாள் கொண்டாடப்படும் ஆசிரியர் நாளை முன்னிட்டு தலைமை அமைச்சரின் கருத்து அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருகோடியே அறுபது இலட்சம் கல்விப்பணியாளர்கள் சீனாவில் இருப்பதை செய்திகளின் மூலம் அறிந்தேன்.


கோயம்புத்துர் சு.சரவணமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
நவ சீனாவின் வைர விழாவை கொண்டாடும் சீன மக்களுக்கு எமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். மேலும், நேயர் விருப்பம் நிகழ்ச்சியை 25 நிமிடங்களாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன வானொலி நேயர் நண்பர்கள் பலர் விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது. இத்தகைய புதிய மாற்றங்களை தொடர்ந்து வரவேற்கின்றோம்.
அமெரிக்கா ஆல்ப‌ர்ட் அனுப்பிய மின்னஞ்சல்
செப்டம்பர் 21 முதல் 25ம் நாள் வரை, அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் அவர்களை அமெரிக்க சீன தமிழ் வானொலி மன்றத்தின் சார்பில் வருக...வருக..வருக..வெல்க..வெல்க..வெல்க‌ என்று உற்சாகமாய் வரவேற்பதில் பெருமகிழ்வெய்துகிறோம். அவரது பயண நோக்கம் முற்றிலும் நிறைவேறவும் வாழ்த்துக்கின்றோம்.
சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக் கேட்டேன் அதில் சீனாவின் முற்கால வரலாற்று சாதனைகளையும் சம்பவங்களையும் இக்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள "சீன வரலாற்று சுவடுகள்" என்ற நிகழ்ச்சியின் முழு விபரங்களை இணையதளத்தில் வெளியிட இருப்பதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்ற மாற்றங்கள் நேயர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுவதோடு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.


நாகர்கோயில், ஸ்டாலின் அனுப்பிய மின்னஞ்சல்
விவசாயிகளின் முதுமை கால காப்புறுதி பற்றி சீன வானொலி ஒளிபரப்பிய செய்தி அருமை. விவசாயிகளின் முதுமை கால காப்புறுதி மூலம் நகரவாசிகளுக்கு இணையாக கிராமப்புற விவசாயிகளின் வளர்ச்சியை தூண்டுவதை சீன அரசு நோக்கமாக கொண்டுள்ளது. கிராமங்களிலுள்ள மக்களும் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டால் பல மாற்றங்கள் ஏற்படும். உலகின் மிக முக்கிய பிரச்சனையான கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதும் முடிவுக்கு வரும் என எண்ணுகிறேன்.
உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
மக்கள் சீனம் பகுதியில் சீன, பாகிஸ்தான் எல்லை வர்த்தகம் பற்றி கூறுகையில் ஒரு நாட்டையும், நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாப்பது பொருளாதார வர்த்தகமே. அந்த வகையில், சீனா-பாகிஸ்தான் இருநாடுகளின் கூட்டு முயற்சியால் வர்த்தக பரிமாற்றங்கள் மூலம் நல்ல வளர்ச்சியையும், சீரான எதிர்காலத்தையும் அறிய செய்ததோடு இரு நாட்டு சாதனைகளையும் அறிய முடிந்தது.


மதுரை, அண்ணாநகர் R.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
சீன அரசு புதிய கிராமப்புற மேம்பாட்டிற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்தேன். 2006 ஆம் ஆண்டு முதல் கிரமங்களில் விவசாய குடும்பங்களின் முற்றங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டன. மருந்துவ காப்புறுதி திட்டத்தால் சீனாவின் கிராமப்புறங்களில் நோய்வாய்ப்படும் முதியோர் நகரவாசிகள் போன்று மருந்துவ காப்புறுதியை அனுபவித்து, சிகிச்சை பெறுகின்றனர். வேளாண் உற்பத்திப் பொருட்களின் மீதான வரி வசூலிப்பை சீன அரசு நீக்கியது. புதிய கிரமப்புறங்களை கட்டி அமைப்பதில் சீன அரசு இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கது


1 2