• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-23 10:04:27    
குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்தை அனுபவிக்கும் முதியோர்களின் வாழ்க்கை

cri
1999ம் ஆண்டு முதல், சீனாவில் நகர மற்றும் கிராமப்புறத்தின் குடிமக்களுக்கு மிகக் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாத அமைப்பு முறை உருவாக்கப்படத் துவங்கியது. இது குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதமாகும். ஒவ்வொரு பிரதேசத்தின் நடைமுறை நிலைமைக்கு இணங்க, பல்வேறு நிலை அரசுகள், உள்ளூரின் மிகக் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாத வரையறையை உருவாக்கியுள்ளன. மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முதியவர் Cui மற்றும் அவரது மனைவி yang அம்மையார், குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்தை அனுபவித்த பெய்சிங் முதியோர்களில் இடம்பெஓறுகிறனர். அவர்கள், பெய்சிங்கிலுள்ள shi jing shan மாவட்டத்தின் கிழக்கு yong le குடியிருப்புப் பகுதியில் வசிக்கின்றனர். முதியவர் cuiக்கு இவ்வாண்டு 73 வயதாகிறது. yang அம்மையாருக்கு வயது 68. பணியிலிருந்து

ஓய்வு பெற்ற அவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இப்போது, அவர், சீனாவில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். முதியவர் cui முன்பு உணவுப் பொருட்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவர். 2000ம் ஆண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கு ஓய்வூதியமும் முதுமைக் கால காப்புறுதியும் மருத்துவ சிகிச்சை காப்பீடும் இல்லை. அவரது மனைவிக்கும் வருமானம் இல்லை. குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதக் கொள்கையின் படி, அப்போது முதல், அவர்கள் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதச் சலுகையை அனுபவிக்கத் தொடங்கினர்.

2000ம் ஆண்டு, எங்களுக்கு எந்த வித வருமானமும் இல்லை. அப்போது முதல், நான் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதச் சலுகையை அனுபவிக்கத் தொடங்கினேன். அப்போது ஒவ்வொரு திங்கள் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதப் பணம், 100 யுவானாகும்.
குடும்பப் பணிகளை மேற்கொள்வதை தவிர, ஓய்வு காலத்தில், yang அம்மையார் உடற்பயிற்சி செய்து வருகின்றார்.
நாள்தோறும் நான் உடற்பயிற்சியும் நடை பயிற்சியும் செய்து வருகின்றேன். ஒவ்வொரு முறையும் பூங்காவில் நான் மூவாயிரம் மீட்டர் நடக்கிறேன்.
மூதாட்டி yang அம்மையார் வீட்டு வேலைகளை செய்ய முதியவர் cui அடிக்கடி உதவியளித்து வருகின்றார். அவர் நாள்தோறும் சில உடற்பயிற்சியையும் செய்து வருகின்றார்.
1 2