குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்தை அனுபவிக்கும் முதியோர்களின் வாழ்க்கை
cri
சீனாவில் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதக் கொள்கையை உருவாக்கிய பிறகு, சீனாவின் சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாத வரையறை, இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. இப்போது, ஒரு திங்களுக்கு, குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதப் பணத்தைச் சார்ந்து, முதியவர் cuiயும் அவரது மனைவியும் வாழலாம். சேமிப்பைப் பயன்படுத்தத் தேவையில்லை. குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம், வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்த்தது.
முதியோருக்கு, மருத்துவ சிகிச்சை செலவு, மிக அதிகம். இது பற்றி, முதியவர் Sui கவலைப்படவில்லை. அவரும் அவரது மனைவியும் முதிய வயதில் அரசு வழங்கும் குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம் மற்றும் மருத்துவ சிகிச்சை உத்தரவாதங்களை அனுபவிக்கின்றனர் என்று முதியவர் Sui செய்தியாளரிடம் கூறினார். தற்போதைய உடை, உணவு, உறைவிடப் பயன்பாடு, போக்குவரத்து வசதிகள், மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்து கவலைப்படத் தேவையிவில்லை. முதியவர் Sui மகிழ்ச்சியடைகிறார். 2005ம் ஆண்டு, அவர் ஒரு கணிணியை வாங்கினார். செய்தியேடு மற்றும் தொலைக்காட்சியின் மூலம், செய்திகளை அறிந்து கொள்ளலாம். ஆனால், சமூகம் இடைவிடாமல் வளர்வதால், இணையம், மென்மேலும் முக்கியமாகிவிட்டது. முதியவர் Sui மேலும் கூறியதாவது
கணினியின் மூலம், செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இணையத்திலுள்ள விரைவான விரிவான செய்திகளின் மூலம், மேலும் அதிக செய்திகளை நான் அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். இது மட்டுமல்ல, கணினியின் மூலம், மூதாட்டி yang வெளியூரில் வசிக்கும் மகளுடன் பேசி வருகின்றார். பணியை நன்றாக மேற்கொண்டு, உடல் நலத்தில் கவமை செலுத்த வேண்டும் என்று எனது மகளிடம் நான் கூறுவதுண்டு. அதே போல் என் பேத்தியடம் நன்றாக படித்து, நல்ல சாதனைகளைப் பெற்று, ஆசிரியர்களின் கூற்றுக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறேன்.
பெய்ஜிங் இசை நாடகத்திலும் பல்வேறு நாட்டுப்புற நாடகங்களிலும் மூதாட்டி yang க்கு ஆர்வமுண்டு. ஓய்வு காலத்தில், தொலைக்காட்சியின் மூலம், அவற்றை அவர் கண்டுரசித்து வருகின்றார். குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதத்தைக் கொண்ட முதியோர்களின் வாழ்க்கையை எமது குடியிருப்புப் பகுதியை செழிப்பாக்கியுள்ளது. முதிய வயதில் முதியோர் மகிழ்ச்சியாக வாழலாம் என்று கிழக்கு yong le குடியிருப்புப் பகுதியின் தலைவர் ai hong bo அம்மையார் கூறினார். சீனாவின் நல்ல கொள்கையால், எனது முதிய வயதை நான் இன்பமாக கழிக்கின்றேன் என்று முதியவர் Sui கூறினார். இப்போது, முதியவர் cui மூதாட்டி yang அம்மையார் இருவரும் கிழக்கு yong le குடியிருப்புப் பகுதியின் தொண்டர்களாகவுள்ளனர். அவர்கள் இயன்ற பணிகளை மேற்கொண்டு, குடியிருப்புப்பகுதிக்கு உதவி வருகின்றனர். 1 2
|
|