• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-13 14:01:56    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை சீன வானொலியில் உங்களது பங்கேற்பை காட்டுகின்ற கருத்துக் கடிதங்களின் தொகுப்பாய் அமையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழன்பன் நேயர் அன்பர்களே! நவ சீனா நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம் நாளை பெய்ஜிங்கில் தொடங்குகிறது. இந்த சீன தேசிய வைர விழாவின்போது தேசிய கொடியேற்றம், இராணுவ அணிவகுப்பு, பொது மக்களின் ஊர்வலம் என பல கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் மாபெரும் ஆற்றலாக சீனாவை உருவாக்க சீன மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இதற்காக பாடுபட்ட தலைவர்கள், அதிகாரிகள், திறமைசாலிகள், பொது மக்கள் அனைவரின் பங்களிப்பிற்கும் தலைவணங்குகின்றோம். எந்நிலையிலும் துவண்டு விடாத சீன மக்கள், வளர்ச்சிப் பாதையில் என்றுமே முன்னேற வைரவிழாவை கொண்டாடும் இந்நேரத்தில், நேயர் அன்பர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.


கலை நட்பார்ந்த தொடர்பு என்றும் தொடரட்டும். சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி கருத்துக் கடிதங்களை தொடர்ந்து எழுதி, நேயர்களின் பங்கேற்பை நிலைநிறுத்த கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை ஓட்டமாவடி எம்.ஐ.நாஹிரா பர்வின் அனுப்பிய கடிதம். உலக தமிழ் மக்களை வந்தடையும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, சீனாவை பற்றியும் உலக நாடுகளை பற்றியும் செந்தமிழில் ஒலிபரப்பு சேவை ஆற்றிவருகிறது. வானொலி நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பில் முத்திரை பதித்து, வானொலி ஒலிபரப்பு இலக்கணத்தை நடைமுறைப்படுத்தி நற்பெயர் பெற்றுள்ள வானொலிகளில் ஒன்றாக திகழும் சீன வானொலியின் புகழ் வளரட்டும்.


தமிழன்பன் தொடர்வது, நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி தேவநல்லூர் எஸ்.செந்தில்குமார் எழுதிய கடிதம். கோவை மாவட்டம் தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் வழங்கிய பேட்டியில் சீன வானொலி ஒலிபரப்பை கேட்பதில் தனது குடும்ப அனுபவத்தை முழுமையாக எடுத்துரைத்தார். அவரது அனுபவங்கள் நேயர்கள் அனைவருக்கும் ஊக்கம் தருவதாக அமைந்தது. 100க்கு அதிகமான நேயர்கள் உள்ள கோவையில் பலரும் கருத்துக் கடிதங்கள் எழுத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கலை தேவநல்லூர் எஸ்.செந்தில்குமார் கேவையிலுள்ள நேயர்கள் பலரும் கருத்துக் கடிதம் எழுத நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நன்றிகள். அடுத்தாக, திமிறி இராமபாளையம் கே.எஸ்.ஆதித்தியன் சீன அரசுத் தலைவரின் சுற்றுப்பயணம் பற்றி அனுப்பிய கடிதம். ரஷியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளில் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் உலக ஒற்றுமைக்காகவும், நிதி நெருக்கடியை சாமாளிக்கவும் முனைப்போடு செயல்படுகின்றார். இது, சீனா உலகிற்காற்றும் பணிகளின் இலக்கை தெளிவுப்படுத்துகின்றது.


தமிழன்பன் நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் செந்து நகரில் சர்வதேச தேயிலை கண்காட்சி நடைபெற்றதை அறிந்தோம். 2008 ஆம் ஆண்டில் சீனாவின் தேயிலை உற்பத்தி 12 இலட்சத்து 46 ஆயிரம் டன் என்றும், அதே ஆண்டில் ஈராயிரத்து 97 ஆயிரம் டன் தேயிலை ஏற்றுமதியானது எனவும் அறிந்தேன். தேயிலை ஏற்றுமதியில் கென்யா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்து, சீனா மூன்றாவது நாடாக இருப்பதையும் தெரிந்து கொண்டேன். நீலகிரியில் நடைபெறும் தேயிலை உற்பத்தி தொடர்பான கூட்டங்களில் நான் அடிக்கடி கலந்து கொள்வதுண்டு. சீனாவின் சாதனைகளை அக்கூட்டத்தில் எடுத்துரைப்பேன். இது, நீலகிரியிலுள்ள பல தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்பதற்கு வழிவகுக்கும்.
கலை இராசிபுரம் ஆர்.எம்.மோகன், எஸ்.செல்வம் அவர்களின் திபெத் பயண அனுபவ அறிவிப்பு பற்றி அனுப்பிய கடிதம். உலக மரபுச் செல்வங்களில் ஒன்றான போத்தலா மாளிகையை பற்றி அதிக தகவல்களை அறிய முடிந்தது. ஐந்தாவது லாமா காலத்தில் கட்டப்பட்ட இம்மாளிகை 13 மாடிகளை கொண்டது. கடைசி ஐந்து மாடிகள் மரத்தாலானவை. அதிலுள்ள வெள்ளை மாளிகையில் அரசு தொடர்பான கூட்டங்களும், சிவப்பு மாளிகையில் மதம் தொடர்பான கூட்டங்களும் நடக்கின்றன. அங்குள்ள பல தலாய்லாமாக்களின் கல்லறைகளில் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதையும், அவற்றில் பத்தாயிரத்திற்கும் அதிகமான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளதையும் விபராமாக விளக்கினார். திபெத்திலுள்ள பள்ளிக்கூடம், திபெத் பாரம்பரிய மருந்து தயாரிக்குமிடம் என நேயர்கள் எங்களுக்கு திபெத்தை சுற்றிக்காட்டிய செல்வம் அவர்களுக்கு நன்றிகள்

1 2