• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-13 14:01:56    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன அரசுத் தலைவர் கூசின்தாவ் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி பெற்றதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அப்போது மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர் தனி முத்திரை பதித்ததோடு மட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகளில் சீனாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியும் உள்ளார். குறிப்பாக, நாடுகளின் பாதுகாப்பு பற்றி ஐ.நா.பொதுப் பேரவைக் கூட்டத்தின்போது சீன அரசுத் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அன்றியும், அணு ஆற்றல் பாதுகாப்பு, உலக நிதி நெருக்கடி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் பற்றியும் தெளிவான கருத்துக்களை வழங்கினார். தற்போது உலகெங்கும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், உலக நாடுகளிடையில் ஒத்துழைப்பை பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றே கருதுகின்றேன்.


அமெரிக்க ஆல்பர்ட் அனுப்பிய மின்னஞ்சல்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டம் செப்டெம்பர் 20ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றதை கேட்டேன். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஹுசிந்தாவ், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டத்தில் தெரிவித்துள்ள‌ கருத்துக்கள் "பொன் எழுத்து"க்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் திறனை உயர்த்தும் முக்கிய வழிமுறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்பொன்முடி, தெ. நா. மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கலையரசி அவர்கள் சீன தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி கூறக்கேட்டேன். 1959 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சீன தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். நடைபெறவுள்ள 11வது சீன தேசிய விளையாட்டுப் போட்டியின் சிறப்பு அம்சங்கள், அதற்கு சீன வானொலி அளிக்கும் ஒத்துழைப்பு என பல தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளிப்பட்டைகளுக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் அமெரிக்காவின் மனப்பாங்கை கண்டித்து, அமெரிக்காவுக்கு எதிராக தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சீன வாகன உருளிப்பட்டை தொழில்துறை சங்கத்தினர் முடிவெடுத்துள்ளதை செய்திகளில் அறிந்தேன். உலக அளவில் இது ஒரு முன்மாதிரியாகும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருக்கும் உலக நாடுகளுக்கு, சீன தொழில்துறையினர் வழிகாட்டியிருக்கிறார்கள்.


ஈரோடு, சி. சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்
அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படும் நவசீனாவின் வைர விழாவை முன்னிட்டு, சீன மக்களுக்கும், சீன வானொலி பணியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் சீனா பல்வேறு துறைகளில் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் சாதனைகளையும் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் முன்னேறியுள்ளதை நான் அறிவேன், மேலும் கடந்த 60 ஆண்டுகளில் சீனா செய்துள்ள மற்றும் பெற்றுள்ள சாதனைகளை சீன வானொலி நேயர்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதையும் வரவேற்கிறேன்.
நாகர்கோயில், பிரின்ஸ் ராபட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
உணவு தானியம் பயிரிடுவது பற்றி சீன வானொலி ஒலிபரப்பிய கட்டுரை அருமையாக இருந்தது. உலக மக்கள் தொகையில் இருபது விழுக்காட்டினரை கொண்டிருந்தாலும், உலகிலுள்ள விளைநிலங்களில் பத்து விழுக்காட்டை கொண்டுள்ள சீனா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. பிற நாடுகளை எதிர்பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான, உணவு உற்பத்தியில் சாதனைப் படைத்திருப்பது பெருமிதமடைய செய்கிறது.


1 2